twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சின்மயிக்காக குரல் கொடுக்கும் ரசிகர்கள்...ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடம்

    |

    சென்னை : எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பாடகி சின்மயி, தென்னிந்திய சினிமா, டிவி கலைஞர்கள் மற்றம் டப்பிங் கலைஞர்கள் யூனியனில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது பற்றி சின்மயி ட்விட்டரில் பலமுறை கருத்து பதிவிட்டும் யாரும் கண்டுகொள்ளவில்லை.

    ராதாரவி, சின்மயி இடையேயான மோதல் அனைவரும் அறிந்ததே. ராதாரவி, டப்பிங் யூனியன் தலைவராக பொறுப்பதும் சின்மயியை சங்கத்தின் உறுப்பினர் பட்டியலில் இருந்து நீக்கினார். இதனை எதிர்த்து சட்ட ரீதியாகவும், சமூக வலைதளங்களிலும் சின்மயி தொடர்ந்து முறையிட்டு வந்தார்.

    குரல் கொடுக்கும் ரசிகர்கள்

    குரல் கொடுக்கும் ரசிகர்கள்

    இந்நிலையில் ரசிகர்கள் சின்மயிக்காக சமூக வலைதளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர். ட்விட்டரில் WeWantChinmayiBack என்ற ஹாஷ்டாக்கை உருவாக்கி டிரெண்டிங் ஆக்கி வருகின்றனர். இதில் சின்மயிக்கு படங்களில் டப்பிங் பேச மீண்டும் வாய்ப்பளிக்க வேண்டும் என பலர் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

    7 மணிநேர உரையாடல்

    7 மணிநேர உரையாடல்

    ட்விட்டரில் புதிதாக துவங்கப்பட்டுள்ள ஸ்பேசஸ் பகுதியில் மே 16 ம் தேதி ரசிகர்களுடன் நேர்காணல் ஒன்றை நடத்தினார் சின்மயி. ரசிகர்கள் கேட்டுக் கொண்டதால், தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வோறு மொழிகளில் அவர் பாடல்கள் பாடினார். கிட்டதட்ட 7 மணி நேரம் ரசிகர்கள் உடன் சின்மயி உரையாடினார். அப்போது சில ரசிகர்கள், சமந்தாவிற்காக சின்மயி டப்பிங் பேசிய வசனங்களை பேச சொல்லிக் கேட்டனர்.

    ராதாரவி உடனான மோதல்

    ராதாரவி உடனான மோதல்

    பிறகு பேசிய சின்மயி, நடிகரும், டப்பிங் யூனியன் தலைவருமான ராதாரவியால் எவ்வாறு தான் தடை விதிக்கப்பட்டது என்பதை கூறினார். ராதாரவியின் இந்த முடிவிற்கு கோர்ட் தடை விதித்திருப்பதாகவும் கூறினார். சின்மயி தனது உறுப்பினர் கட்டணத்தை முறையாக செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே அவருக்கு டப்பிங் யூனியனில் தடை விதிக்கப்பட்டது.

    டைரக்டர் மித்ரனுக்கு நன்றி

    டைரக்டர் மித்ரனுக்கு நன்றி

    இந்த உரையாடலின் போது சின்மயி, டப்பிங் யூனியனின் அதிகாரமற்ற முறையில் விதிக்கப்பட்ட தடையை கண்டுகொள்ளாமல் தனது படத்தில் டப்பிங் பேச வைத்த டைரக்டர் பி.எஸ்.மித்ரனுக்கு நன்றி தெரிவித்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஹீரோ படத்தில் மித்ரன், கல்யாணி பிரியதர்ஷனுக்கு சின்மயியை டப்பிங் பேச வைத்திருந்தார்.

    Recommended Video

    Interviewer பேசுற பேச்சா இது? Chinmayi about Viral Girl - Filmibeat Tamil
    கொந்தளிக்கும் ரசிகர்கள்

    கொந்தளிக்கும் ரசிகர்கள்

    சின்மயியின் இந்த உரையாடலுக்கு பிறகு ரசிகர்கள் இந்த ஹாஷ்டாக்கை உருவாக்கி உள்ளனர். மீ டூ போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த பாடகி சின்மயிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் னெ ரசிகர்கள் சமூகவலைதங்கள் வாயிலாக கேட்டு வருகின்றனர். ட்விட்டர் டிரெண்டிங்கில் இந்த ஹாஷ்டாக் முதலிடத்தில் உள்ளது.

    English summary
    Chinmayi gets support from fans, who have begun to trend the hashtag #WeWantChinmayiBack to ensure that the singer gets opportunities to dub for films.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X