மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாள்.. ட்விட்டரில் மாஸ் காட்டும் தளபதி ரசிகர்கள்!

சென்னை: இயக்குநர் லோகேஷ் கனகராஜின் 35வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

மாநகரம், கைதி, மாஸ்டர் என இவர் இயக்கிய மூன்று படங்களுமே மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளன.

அடுத்ததாக உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கி வருகிறார்.

35வது பிறந்தநாள்

35வது பிறந்தநாள்

கோயம்பத்தூரில் உள்ள கிணத்துக்கடவு என்கிற கிராமத்தில் 1986ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி பிறந்த லோகேஷ் கனகராஜ் இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். கார்த்திக் சுப்புராஜ் நடுவராக இருந்த குறும்பட போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற லோகேஷை பாராட்டி சினிமாவுக்குள் நுழைய வித்திட்டார் கார்த்திக் சுப்புராஜ்.

காலம் குறும்படம்

காலம் குறும்படம்

லோகேஷ் கனகராஜின் காலம் குறும்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வெளியான அவியல் ஆந்தாலஜி படத்தில் இணைத்து வெளியிட்டார் கார்த்திக் சுப்புராஜ். அதற்கு பின்னர் தான் மாநகரம் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார் லோகேஷ் கனகராஜ்.

எல்லாமே ஹிட்

எல்லாமே ஹிட்

மாநகரம் படம் விமர்சகர்கள் மத்தியில் பாராட்டுக்களை அள்ளிய நிலையில், நடிகர் கார்த்தி உடன் இணைந்து கைதி படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ். அந்த படம் இந்தியளவில் வரவேற்பை பெறவே தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷுக்கு கிடைத்தது. மாஸ்டர் படம் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராகி விட்டார் லோகேஷ் கனகராஜ்.

கமல் படம்

கமல் படம்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஒரு தீவிர கமல் ரசிகர், அவர் இயக்கும் படங்களிலும் கமல் படத்தின் சாயல் மற்றும் பாதிப்பு இருக்கத்தான் செய்யும் என அவரே பல மேடைகளில் கூறியுள்ளார். மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசனையே இயக்கும் வாய்ப்பும் லோகேஷுக்கு கிடைத்துள்ளது. விக்ரம் படத்தின் அறிமுக டீசரே ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய நிலையில், அந்த படத்தின் ரிலீசுக்கு அனைவரும் காத்திருக்கின்றனர்.

வாழ்த்தும் ரசிகர்கள்

வாழ்த்தும் ரசிகர்கள்

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் பிறந்தநாளை தளபதி ரசிகர்கள் #HBDDirectorLokesh என்கிற ஹாஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் டிரெண்ட் செய்து வாழ்த்து மழையில் நனைத்து வருகின்றனர். மீண்டும் தளபதி விஜய்யுடன் ஒரு படத்தில் இணைய வேண்டும் என்றும் மாஸ்டர் போல இன்னொரு தரமான சம்பவம் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X