வாட் எ பெர்பாமன்ஸ்.. இதுதான்டா தீபாவளி.. 'சூரரைப் போற்று'வை பாராட்டும் பேன்ஸ்.. டிரெண்டாகும் #Maara

By

சென்னை: சூர்யாவின் சூரரைப் போற்று படம் வரவேற்பை பெற்றுள்ளதை அடுத்து, மாறா என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

Recommended Video

Soorarai Pottru Review | 'Equally Balanced' Surya • Sudha Kongara

சூர்யா நடித்துள்ள படம் 'சூரரைப் போற்று'. சுதா கொங்கரா இயக்கியுள்ளார். இதில் அபர்ணா பாலமுரளி ஹீரோயினாக நடித்துள்ளார்.

பரேஸ் ராவல், ஊர்வசி, மோகன்பாபு, கருணாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர்.

திருட்டுத்தனமாக லீக்

திருட்டுத்தனமாக லீக்

இந்தப் படம் அமேசான் பிரைமில் இன்று ரிலீஸ் ஆவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், நேற்று இரவே ரிலீஸ் ஆகிவிட்டது. அடுத்த சில நிமிடங்களிலேயே சில இணையதங்களில் இந்தப் படம் திருட்டுத்தனமாகவும் லீக் ஆயின. இருந்தாலும் இந்தப் படம் ரசிர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஏர்டெக்கான் கோபிநாத்

ஏர்டெக்கான் கோபிநாத்

ரசிகர்கள், சூர்யாவின் மாறா கேரக்டரை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். இயக்குனர் சுதா கொங்கராவையும் பாராட்டி வருகின்றனர். சாதாரண மக்களும் விமானப் பயணம் செய்வதற்காக பட்ஜெட் விமானப் போக்குவரத்தை துவக்கிய ஏர்டெக்கான் கோபிநாத்தின் வாழ்க்கை கதைதான் இந்தப் படம்.

கேரக்டர் பெயரான மாறா

கேரக்டர் பெயரான மாறா

அதை சினிமாவுக்காகக் கொஞ்சம் மாற்றி, கமர்சியலாகவும் விறுவிறுப்பாகவும் இயக்கி இருக்கிறார், சுதா கொங்கரா. இதை ட்விட்டரில் நெட்டிசன்ஸ் பாராட்டி வருகின்றனர். இதையடுத்து இந்தப் படத்தில் சூர்யாவின் கேரக்டர் பெயரான #Maara-வையும் #SooraraiPottru ஆகிய ஹேஷ்டேக்குகளை ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

முக்கியமான படம்

முக்கியமான படம்

இந்த ஹேஷ்டேக்கில், சூர்யா உட்பட படத்தில் பணியாற்றிய பலரை பாராட்டி வருகின்றனர். சூர்யாவின் நடிப்பு அமர்க்களம் என்றும் சூர்யாவின் கேரியரில் இது முக்கியமான படம் என்றும் ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை படத்துக்கு பெரிய பலம் என்றும் பலர் கூறியுள்ளனர்.

மாறாவாக வாழ்ந்திருக்கிறார்

மாறாவாக வாழ்ந்திருக்கிறார்

இந்த படத்தில் சூர்யா, மாறாவாக வாழ்ந்திருக்கிறார் . மற்றவர்கள் இப்படி செய்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். இந்தப் படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமையும் ரசித்தேன். இதுதான் நமக்கு தீபாவளி என்று ஒருவர் கூறியுள்ளார். இதோடு, நடிகை அபர்ணா பாலமுரளி என்ற ஹேஷ்டேக்கையும் ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X