'உதவி செய்தும் காப்பாற்ற முடியலையே..' நடிகர் தவசி மறைவுக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் இரங்கல்!

By

சென்னை: புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசியின் மறைவு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Recommended Video

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் தவசி காலமானார் | Filmibeat tamil

பாரதிராஜாவின் கிழக்குச் சீமையிலே படத்தில் நடிகராக அறிமுகமானவர், தவசி. தனது பெரிய மீசையால் ரசிகர்களை கவர்ந்தவர்.

சிவகார்த்திகேயனின், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் அவர் பேசிய, கருப்பன் குசுபுகாரன் என்ற வசனம் கவனிக்கப்பட்டது.

உணவுக்குழாய் கேன்சர்

உணவுக்குழாய் கேன்சர்

தவசிக்கு உணவுக்குழாயில் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. நோய் தீவிரம் அடைந்ததால் உடல் நிலை பாதிக்கப்பட்டது. உடல் மெலிந்து பரிதாபமாகக் காட்சி அளிக்கும் அவர், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாயின. அவர் மதுரையில், திமுக எம்.எல்.ஏ, சரவணனின், சரவணா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.

பணமின்றி தவிப்பு

பணமின்றி தவிப்பு

சிகிச்சைக்கு போதிய பணமின்றி தவிப்பதாகவும் நடிகர்கள், திரையுலகினர் தனக்கு உதவ வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அவருக்குத் தொடர்ந்து 6 மாதங்களுக்கு மேல் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால், அதிக பணம் தேவைப்படுவதாகக் கூறப்பட்டது.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

இதையடுத்து, தவசியின் சிகிச்சைக்கு சரவணா மருத்துவமனை சார்பில் திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணன், தனது சூர்யா தொண்டு நிறுவனம் மூலம் உதவி வந்தார். இந்நிலையில், நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சூரி உள்பட பலர் அவருக்கு உதவினர்.

ரசிகர்கள் மத்தியில்

ரசிகர்கள் மத்தியில்

'அப்பாவின் உடல்நிலையில் முன்னேற்றம் இருக்கிறது. உயிருக்கு ஆபத்து இல்லை என்று அவர் மகள் சில நாட்களுக்கு முன், தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவர் திடீரென உயிரிழந்திருப்பது சினிமா வட்டாரத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மட்டப்பாறை கிராமம்

மட்டப்பாறை கிராமம்

அவரது உடல், மருத்துவமனையில் இருந்து அவரது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் மட்டப்பாறை கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

காப்பாற்ற முடியலையே

காப்பாற்ற முடியலையே

உதவி செய்தும் தீவிர சிகிச்சை அளித்தும் தவசியை காப்பாற்ற முடியவில்லையே என ரசிகர்கள் வருத்தத்துடன் கூறியுள்ளனர். இந்நிலையில் ட்விட்டரில் #RIPThavasi என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி இருக்கிறது. அதில் சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X