Actor Vijay: விஜய் பிறந்தநாள் வீடியோ.. என்ன ப்ரோ GTA ஃபேனா.. வெங்கட் பிரபுவை ஓட்டிய ரசிகர்கள்!
சென்னை: நடிகர் விஜய்யின் 50வது பிறந்த நாள் மற்றும் அவரது அரசியல் என்ட்ரியை தொடர்ந்து முதல் பிறந்தநாள் என இன்றைய தினம் ரசிகர்கள் அவரது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி சம்பவத்தால் இன்றைய தினம் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் வேண்டாம் என்று விஜய் கேட்டுக் கொண்டுள்ளார். இதையடுத்து இன்றைய தினம் ரசிகர்கள் அதிகமான கொண்டாட்டங்களை தவிர்த்து உள்ளனர்.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் 2வது சிங்கிள் இன்று மாலை வெளியாகவுள்ளது. நேற்றைய தினம் இந்த பாடலின் பிரமோ வெளியிடப்பட்டது. மேலும் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு விஜய் பிறந்தநாள் ஷாட்ஸ் வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டு ரசிகர்களை மென்மேலும் உற்சாகப்படுத்தியுள்ளனர்.

நடிகர் விஜய் பிறந்தநாள்: நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி இன்றைய தினம் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அடுத்தடுத்து பல விஷயங்கள் நடந்து வருகின்றன. இன்று மாலை இந்த படத்தின் 2வது சிங்கிள் வெளியாக உள்ளது. இது குறித்து முன்னதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் பாடலின் பிரமோவும் வெளியிடப்பட்டது. சின்ன சின்ன கண்கள் இன்று இந்த பாடலில் கொஞ்சலாக பாடியுள்ளார் விஜய். அவருடன் மறைந்த பாடகி பவதாரணியும் இந்த பாடலில் இணைந்து பாடியுள்ளார். ஏஐ தொழில்நுட்பம் மூலம் இதை யுவன் சங்கர் ராஜா சாத்தியப்படுத்தியுள்ளார்.
பிறந்தநாள் சிறப்பு ஷாட்ஸ் வீடியோ: இதனிடையே நேற்று நள்ளிரவு 12 மணிக்கு இந்த படத்தின் விஜய் பிறந்தநாள் ஷாட்சை வெளியிட்டு ரசிகர்களை படக்குழுவினர் மேலும் உற்சாகப்படுத்தியுள்ளனர். முன்னதாக கள்ளக்குறிச்சி சம்பவத்தையடுத்து பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு விஜய் ரசிகர்களை கேட்டுக் கொண்டிருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் அதிகமான கொண்டாட்டங்கள் காணப்படவில்லை. விஜய்யின் 50வது பிறந்தநாள் மற்றும் அவரது அரசியல் என்ட்ரிக்குப் பிறகு வரும் முதல் பிறந்தநாள் என இந்த பிறந்தநாள் விஜய்யின் மிக முக்கியமான பிறந்த நாளாக அமைந்துள்ளது.
பிறந்தநாள் கொண்டாட்டம்: இந்நிலையில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படக்குழுவினர் மட்டுமே விஜய் பிறந்தநாளையடுத்து அடுத்தடுத்து ஷாட்ஸ் மற்றும் பாடல் என வெளியிட்டு வருகின்றனர். நேற்று நள்ளிரவு வெளியான விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷல் ஷாட்ஸை அவரது ரசிகர்கள் மிகவும் என்ஜாய் செய்தனர். இருந்தபோதிலும் சமூக வலைதளங்களில் பலரும் இந்த வீடியோவை ட்ரோல் செய்ததை பார்க்க முடிந்தது. இந்த வீடியோ விவேகம் மற்றும் ஜிடிஏ படங்களின் சாயலில் அமைந்துள்ளதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். வெங்கட் பிரபு ஜிடிஏ ஃபேனா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
GTAன்னே டைட்டில் வச்சிருக்கலாமே?: GTAன்னே படத்திற்கு பேர் வைத்திருக்கலாம் என்றும் அந்த ரசிகர்களின் சப்போர்ட் கோட் படத்திற்கு கிடைத்திருக்கும் என்றும் தொடர்ந்து ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். வெங்கட் பிரபு ஐடியா இல்லாமல் கோட் என்ற தலைப்பை வைத்து விட்டதாகவும் கலாய்த்து வருகின்றனர். ஜிடிஏ என சுருக்கமாக சொல்லப்படும் கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ வீடியோ கேமில், இதுவரை 5 தொடர்கள் வெளியாகி சர்வதேச அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அடுத்த ஆண்டில் இதன் 6வது தொடர் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











