போதும்.. வேற டிரெஸ்ஸே கிடைக்கலையா.. பிக்பாஸ் பிரபலத்தால் காண்டான நெட்டிசன்கள்!
சென்னை: லக்னோவில் நடந்த ஃபேஷன் ஷோ நிகழ்ச்சிக்கு போனதும் போதும், அதே டிரெஸ்ஸுடன் வளைச்சி வளைச்சி விதமாக போஸ் கொடுத்து, போட்டோக்களாக போட்டுத் தள்ளுகிறார் மீரா மிதுன்.
Recommended Video
உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்ட மீரா மிதுனுக்கு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அவரை பாராட்டுவதற்காக இல்லையென்றாலும், சந்தானம் சொல்வது போல கலாய்க்கவே நிறைய பேர் அவரது ரசிகர்கள் வட்டத்தில் இணைந்து வருகின்றனர்.
லக்னோ ஃபேஷன் ஷோ
மாடல் அழகியான மீரா மிதுன், தனது சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து, செம செக்ஸியான புகைப்படங்களை பகிர்ந்து இணையத்தை சூடேற்றி வருகிறார். சமீபத்தில் நடந்த லக்னோ ஃபேஷன் ஷோவில் கலந்து கொண்டு ரேம்ப்வாக் செய்த புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை அள்ளி உள்ளார்.
ஒரே அடியா
ஏதோ பிக்பாஸ் பிரபலமாச்சே, நம்ம மீரா மிதுன் ஆச்சே, லக்னோ ஃபேஷன் ஷோவில் எல்லாம் போய் கேட் வாக் செய்கிறாரே என ரசிகர்கள் தெரியாத்தனமாக பாராட்டியது தான் சாக்கு என ஒரே அடியா அதே உடையுடன் எடுத்த வித்தியாச வித்தியாசமான போஸ் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.
வெறுப்பவர்கள் வெறுக்கட்டும்
மீரா மிதுன் பதிவிடும் போட்டோக்களையும், வீடியோக்களையும் பார்த்து ஜொள்ளுவிடும் ரசிகர்கள், அவரை பங்கமாக கலாய்த்தும், கழுவி ஊற்றியும் வருகின்றனர். இந்நிலையில், வீடியோ ஒன்றை வெளியிட்ட மீரா மிதுன், ஹேட்டர்ஸ்கள் வெறுத்தால் வெறுக்கட்டும், நான் செய்வதை செய்து கொண்டே இருப்பேன் என பதிவிட்டுள்ளார்.
வேற டிரெஸ் போடுங்க
நேற்று முதல் இன்று வரை ஒரே உடையில் புகைப்படங்களை மீரா மிதுன் பதிவிட்டு வருவதால், ஏமாற்றம் அடைந்த நெட்டிசன்கள், போதும், ஒரே ஸ்டில் தான், வேற காஸ்ட்யூம் ட்ரை பண்ணுங்க என காண்டாகி கமெண்ட் செய்துள்ளனர். விட்டா இவரே ஒரு டிரெஸ் வாங்கிக் கொடுத்துடுவார் போல..
இடுப்புக்கு மேல.. இல்லை கீழ
ஒண்ணு இடுப்புக்கு மேல காட்டணும், இல்லை இடுப்புக்கு கீழ காட்டணும்.. மொத்தமா கவர் பண்ணிட்டு வரவே முடியாது.. அப்படித் தானே என இந்த சமூக போராளியும், மீரா மிதுனை திட்டித் தீர்த்து வருகிறார். மற்றொரு ரசிகரும், ஒரே காஸ்ட்யூமிலேயே போட்டோ போடுறீங்களே, எப்போதான் டிரெஸ் மாத்துவீங்க என கேட்டு வருகிறார்.
போதும் முடியல
மீண்டும் அதே காஸ்ட்யூமில் எடுத்த புகைப்படங்களை போட்டு, தனது ரசிகர்களுக்கு மாலை வணக்கம் வைத்துள்ள பிக்பாஸ் பிரபலம் மீரா மிதுனை பார்த்த ரசிகர்கள், கையெடுத்துக் கும்பிட்டு, போதும் மேடம்.. ப்ளீஸ்.. வேற காஸ்ட்யூம்ல போட்டோ போடுங்க என அழாத குறையாக கெஞ்சி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











