நான் கேட்டது.. ஆனால்.. கிடைச்சது.. ரொம்ப லோ பட்ஜெட் சந்திரமுகியா இருக்கும் போலயே.. ரசிகர்கள் கலாய்!
சென்னை: இயக்குநர் பி. வாசு இயக்கத்தில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, ஜோதிகா, பிரபு, சோனு சூட், கே.ஆர். விஜயா, மாளவிகா, நாசர், வடிவேலு என நடிப்பு பட்டாளமே நடித்தது.
ஆனால், சந்திரமுகி 2 என உருவாகி வரும் படத்தின் காஸ்டிங்கை பார்த்த ரசிகர்கள், அய்யோ இதை பார்க்கவே பயமா இருக்கே என கலாய்த்து வருகின்றனர்.
சந்திரமுகி 2வுக்கு பதிலாக வேற பெயரையாவது மாத்துங்க என ரஜினிகாந்த் ரசிகர்களே ட்ரோல் செய்து வருவது அனைவரையும் ஷாக் ஆக்கி உள்ளது.

ரஜினிக்கு பதில் லாரன்ஸ்
சந்திரமுகி 2 அறிவிப்பு வெளியானதுமே மீண்டும் ரஜினிகாந்த் அந்த படத்தில் நடிக்கப் போகிறாரா என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், ராகவா லாரன்ஸ் தான் நடிக்கப் போகிறார் என்றதுமே பெரும் எதிர்பார்ப்பு குறைந்து விட்டது. காஞ்சனா சீரிஸ் படங்களே ரசிகர்களை கடுப்பாக்கிய நிலையில், சிவலிங்கா ரேஞ்சுக்கு சந்திரமுகி 2 படம் மாறிவிடுமோ என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

ஜோதிகாவுக்கு பதில் லட்சுமி மேனனா
சந்திரமுகி 2 படத்தின் ஷூட்டிங்கை ஒரு வழியாக இயக்குநர் பி. வாசு இயக்கி முடித்துள்ளார். நேற்று படப்பிடிப்பு நிறைவடைந்து ஒட்டுமொத்த படக்குழுவினரும் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் வெளியான நிலையில், அதற்கு கீழ் நெட்டிசன்கள் போட்டுள்ள கமெண்ட்டுகளும் ட்ரோல்களும் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன. இவர் தான் இந்த படத்தில் ஜோதிகாவா என லட்சுமி மேனனை பார்த்ததும் ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். த்ரிஷான்னு சொன்னாங்க, சாய் பல்லவின்னு சொன்னாங்க கடைசியில லட்சுமி மேனன் தானா என ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர்.

தலைவியே ஓடல
சந்திரமுகியாக கங்கனா ரனாவத்தை காஸ்ட் பண்ணி இந்த படத்தை பாலிவுட் படம் அளவுக்கு பில்டப் பண்ண நினைத்த நிலையில், பாலிவுட்டில் கங்கனா நடிப்பில் வெளியான பல படங்கள் படு தோல்வியை சந்தித்து வருவதை குறிப்பிட்டு ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். தமிழில் கங்கனா சமீபத்தில் நடித்த தலைவி படமே எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லையே, சந்திரமுகி 2 படம் என்ன ஆகுமோ என ரசிகர்கள் தங்கள் அச்சத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பெயர் கெடாமல் இருக்கணும்
ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படத்தின் காஸ்டிங்கே பிரம்மாண்டமாக இருந்தது. ஆனால், லோ பட்ஜெட் சந்திரமுகியாகவே இந்த இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக குறை சொல்லி வரும் நெட்டிசன்கள், 3 ஆண்டுகள் திரையரங்கில் ஓடி சாதனை படைத்த சந்திரமுகி படத்தின் பெயரை கெடுக்காமல் படத்தின் கதையாவது இருக்கணும் என கமெண்ட்டுகளை பறக்கவிட்டு வருகின்றனர்.

அஜித் ரசிகர்கள் அப்செட்
சந்திரமுகி படத்தை சந்திரமுகி 2 சொதப்பி விடக் கூடாது என ஒரு பக்கம் ரஜினி ரசிகர்கள் கவலையில் உள்ள நிலையில், மறுபக்கம் லைகாவிடம் இருந்து எந்தவொரு அப்டேட் வந்தாலும், ஏகே 62 அப்டேட்டா என ஓடோடி வந்து பார்த்து ஏமாந்து போகும் அஜித் ரசிகர்கள் அடுத்து பொன்னியின் செல்வன் 2 அப்டேட் தான் வரும், ஏகே 62 அப்டேட் வராது என்ற முடிவுக்கு வந்து நோட்டிஃபிகேஷனை ஆஃப் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











