மன்சூர் அலிகான் - த்ரிஷா சர்ச்சை.. சிரஞ்சீவிகாரு நீங்கள் எல்லாம் பேசலாமா?.. வைத்து செய்யும் ரசிகர்கள்
சென்னை: Chiranjeevi (சிரஞ்சீவி) மன்சூர் அலிகான் த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசிய விவகாரத்தில் சிரஞ்சீவியை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் மன்சூர் அலிகான் த்ரிஷா பற்றி ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் சில வாரங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசியிருந்தார். அவர் அப்படி பேசியதற்கு கடும் கண்டனங்களும் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. அதிலும் த்ரிஷா பெரும் கோபத்துடன், மன்சூர் அலிகான் எல்லாம் மனித குலத்துக்கே இழுக்கு என்று தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார்.

வலுத்த எதிர்ப்பு: த்ரிஷா மட்டுமின்றி லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ், குஷ்பூ, மடோனா, சின்மயி, எம்.எஸ்.பாஸ்கர், பாரதிராஜா என பலரும் தங்களது காட்டமான எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றனர். அதேசமயம் முன்னணி ஹீரோக்களான ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்டோர் இதுவரை இந்த விவகாரம் குறித்து வாய் திறக்காதது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது.
வழக்குப்பதிவு: திரையுலக கண்டனம் மட்டுமின்றி பொதுவெளியிலும் மன்சூர் அலிகானுக்கு கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென்று தேசிய மகளிர் ஆணையம் டிஜிபிக்கு உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மன்சூர் அலிகான் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
சிரஞ்சீவி சப்போர்ட்: இதற்கிடையே தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி த்ரிஷாவுக்கு தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “த்ரிஷா பற்றி மன்சூர் அலிகான் கூறிய கண்டிக்கத்தக்க கருத்து எனது கவனத்துக்கு வந்தது. இந்த கருத்து ஒரு கலைஞர் என்பவருக்கு மட்டுமில்லை ஒவ்வொரு பெண்னுக்கும் அருவருப்பானது ஆகும். இந்த கருத்துக்களை கடுமையான வார்த்தைகளால் கண்டிக்க வேண்டும், த்ரிஷாவுடன் நான் நிற்கிறேன். இதுபோன்ற கொடூரமான கருத்துக்கு உள்ளான ஒவ்வொரு பெண்ணும் த்ரிஷாவுடன் நிற்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.
நீங்கள் பேசலாமா?: சிரஞ்சீவி தெரிவித்திருந்த கண்டனத்துக்கு பலரும் தங்களது வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். அதேசமயம் இதுபோன்ற விஷயத்தில் நீங்கள் பேசலாமா என்றும் சிரஞ்சீவியை பார்த்து ரசிகர்களில் ஒருதரப்பினர் கேள்வி எழுப்பிவருகின்றனர். அதாவது, சிரஞ்சீவி நடித்த ஆச்சார்யா படத்தின் விழாவில் நடிகை பூஜா ஹெக்டே தனியாக போஸ் கொடுத்திருந்தார்.
அப்போது அவர் அருகில் சென்ற சிரஞ்சீவி தனது பக்கத்தில் பூஜா ஹெக்டேவை வலுக்கட்டாயமாக நிறுத்தி போஸ் கொடுக்கும்படி செய்தார். மேலும் அவரை கட்டி அணைக்கவும் முயன்றார். அந்த வீடியோ அப்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதேபோல் தமிழில் அஜித் நடித்து ஹிட்டான வேதாளம் திரைப்படம் தெலுங்கில் போலா ஷங்கர் என்ற பெயரில் ரீமேக் ஆனது. அந்த படத்தின் நிகழ்ச்சியிலும் கீர்த்தி சுரேஷின் அருகில் அமர்ந்துகொண்டு அவரது அனுமதி இல்லாமலேயே சிரஞ்சீவி தொடும் வீடியோக்கள் வெளியாகின. அப்போது சிரஞ்சீவி தொடுவது கீர்த்தி சுரேஷுக்கு பிடிக்காத மாதிரிதான் கீர்த்தியின் எக்ஸ்பிரெஷன்களும் இருந்தன.
அதுமட்டுமின்றி அந்த விழாவில் பேசிய சிரஞ்சிவீ, 'எங்கள் வீட்டில் சாப்பிட்டு எப்படி கிளாமர் ஆகிட்டாங்க பாருங்க. நான் கீர்த்தி சுரேஷிடம் என்னை அண்ணன் என்று அழைக்கக்கூடாது என முதல் நாளே சொல்லிவிட்டேன்’ என்று தெரிவித்திருந்தார். தற்போது இந்த இரண்டு வீடியோக்களையும் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











