என்ன இருந்தாலும் இப்படி கலாய்க்கக்கூடாது..நொந்துப்போன கூல் சுரேஷ்!

சென்னை : வெந்து தணிந்தது காடு...சிம்புக்கு வணக்கத்தை போடு என ஒரே ஒரு டயலாக்கை வைத்து பிரபலமான கூல் சுரேசை ரசிகர் ஒருவர் பங்கமாக கலாய்த்து உள்ளார்.

நடிகர் கூல் சுரேஷ் சாக்லேட், சீறி, காக்க காக்க, இனிமேல் இப்படித்தான், நண்பேன்டா போன்ற படத்தில் நடித்துள்ளார். வில்லனாக அறிமுகமான கூல் சுரேஷ் படவாய்ப்பு இல்லாததால் நகைச்சுவை நடிகராக மாறினார்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சந்தானத்துடன் சேர்த்து இவர் அடிக்கும் ரகளைக்கு ஆளவே இருக்காது.

கூல் சுரேஷ்

கூல் சுரேஷ்

சிம்புவின் தீவிர ரசிகரான இவர் வெந்து தணிந்தது காடு படத்தின் பெயர் அறிவிப்பு வந்தவுடன் வெந்துதணிந்தது காடு...சிம்பு படத்திற்கு வணக்கத்தை போடு என அவர் செய்த புரோமோஷன் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனது. சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்துள்ளது.

ஐ போன் பரிசு

ஐ போன் பரிசு

இந்த படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கூல் சுரேஷிற்கு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் ஐபோன் ஒன்றை பரிசாக அளித்திருந்தார். அது மட்டும் இல்லாமல் சிம்புவின் அடுத்த படத்தில் கூல் சுரேஷ் நடிப்பார் என்று சிம்புவே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.இதனால், கூல் சுரேஷ் பட விமர்சனம், போட்டோஷுட் என படு பிஸியாக இருக்கிறார்.

பத்து தல படத்திற்கு வேற டயலாக்

பத்து தல படத்திற்கு வேற டயலாக்

இதையடுத்து, சிம்பு நடிப்பில் அடுத்து திரைக்கு வரவிருக்கும் பத்து தல படத்தை வைத்து ஒரு வேற டயலாக்கை யோசித்து வைத்திருப்பதாகவும் இனிமேல் அந்த டயலாக்கைத்தான், பத்து தல படம் வெளியாகும் வரைக்கும் சொல்வேன் என்று கூறியிருந்தார். அது என்ன? டயலாக் என்பதை விரைவில் தெரிவிக்கிறேன். நீங்கள் ஏதாவது யோசித்து வைத்திருந்தாலும் கமெண்ட் பாக்ஸில் சொல்லுங்கள் என கூறியிருந்தார்.

பங்கமாக கலாய்த்த ரசிகர்

பங்கமாக கலாய்த்த ரசிகர்

இந்நிலையில், காலங்களில் அவள் வசந்தம் படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த கூல் சுரேஷிடம், பத்து தல படத்தின் டயலாக் சொல்லுங்க என செய்தியாளர்கள் கேட்டுக்கொண்டு இருக்க, ஒரு ரசிகர், STRன் பத்து தல...கூல் சுரேஷின் சொட்ட தல என பங்கமாக கலாய்த்துவிட்டார். இதற்கு, சிரித்துக்கொண்டே இருந்த கூல் சுரேஷ், என்ன இருந்தாலும் இப்படி கலாய்க்கக்கூடாது என நொந்துப்போனார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X