Don't Miss!
- News
கம்பி எண்ணும் கணவன்! சிறைக்கு விசிட் அடித்தபோது சிக்கிய முகிலா! பெற்ற பிள்ளைக்கு நேர்ந்த கொடூரம்..!
- Finance
சென்னைக்கு மேலும் பெருமை சேர்க்கும் அம்பாசிடர் 2.0.. மீண்டும் உற்பத்தி.. எங்கு தெரியுமா?
- Automobiles
குட்டி குட்டி தெருவா இருந்தாலும் அசால்டா நுழைஞ்சிடும்.. புதிய மஹிந்திரா பொலிரோ சிட்டி பிக்-அப் ட்ரக் அறிமுகம்!
- Technology
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 'இந்த' திட்டத்தை தேர்வு செய்தால் ஒரு 425 நாட்களுக்கு பிரச்சனை இருக்காது! எந்த திட்டம்
- Sports
ஐபிஎல் குவாலிபையர் 2 - ராஜஸ்தான், பெங்களூரு இன்று மோதல் - பிளேயிங் லெவன்.. பிட்ச் ரிப்போர்ட்
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் கவனக்குறைவால் பெரிய இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது...
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தில்லானா...தில்லானா...ஐக்கி பெர்ரியுடன் செம ஆட்டம் போட்ட அபிஷேக் ராஜா
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி அக்டோபர் 3 ம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. 18 போட்டியாளர்களுடன் துவங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியாக இருவர் வந்துள்ளனர்.
இதுவரை 9 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த வாரம் அபிஷேக் ராஜா வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் இமான் அண்ணாச்சி வெளியேற்றப்பட்டுள்ளார். தற்போது 11 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் போட்டி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
ட்விட்டர்
வெளியிட்ட
டாப்
10
லிஸ்ட்….
கீர்த்தி
சுரேஷ்
முதலிடம்…
நயன்தாரா
பெயரே
இல்லை
!

ராப் பாடகியான ஐக்கி
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தஞ்சை தமிழ் பெண்ணாக இருந்தாலும் வெள்ளை நிற முடியும் வெளிநாட்டவரை போன்ற தோற்றத்துடன் அனைவரையும் கவர்ந்தவர் ஐக்கி பெர்ரி. டாக்டரான இவர், இசை மீதான ஆர்வத்தால் தமிழில் ராப் பாடல்களை தானே எழுதி பாடி வருகிறார். பாடகி, பாடல் எழுத்தாளர், நடிகை என பல முகங்களைக் கொண்டவர் ஐக்கி பெர்ரி.

பிஸியான ஐக்கி பெர்ரி
பிக்பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமான ஐக்கி பெர்ரி, ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கிய வாரத்தில் வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு, சக போட்டியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களை சந்தித்து வருகிறார். சோஷியல் மீடியாவிலும் ரசிகர்களை லைவில் சந்தித்து பேசி பிஸியாக இருந்து வருகிறார்.

வெளியேறியவர்களுடன் சந்திப்பு
முதலில் இமான் அண்ணாச்சி வீட்டிற்கு சென்ற ஐக்கி, பிறகு இசைவாணி வீட்டிற்கு சென்று அவரை சந்தித்த ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். அதோடு கானா பாடகியான இசைவாணியுடன் இணைந்து விரைவில் இசை ஆல்பம் ஒன்றை தயாரித்து, வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். முன்னதாக முதல் ஆளாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய நமிதா மாரிமுத்துவுடன் இன்ஸ்டாகிராம் லைவில் பேசினார் ஐக்கி.

அபிஷேக்குடன் சந்திப்பு
இந்நிலையில் லேட்டஸ்டாக கடந்த வாரம் பிக்பாஸில் இருந்து வெளியேறிய அபிஷேக் ராஜாவை சந்தித்துள்ளார் ஐக்கி. இருவரும் இணைந்து இன்ஸ்டாகிராம் லைவில் ரசிகர்களுடன் பேசினர். ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்கள் இணைந்து பதிலளித்தனர்.

செம ஆட்டம்
இதைத் தொடர்ந்து இருவரும் இணைந்து முத்து படத்தில் வரும் தில்லானா தில்லானா பாடலுக்கு செமயாக ஆட்டம் போட்டுள்ளனர். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஐக்கி பெர்ரி. அதோடு, அனைவரும் மனிதர்கள் தான். அனைவரும் ஒருவருக்கு ஒருவர் அன்பை பகிர்ந்து கொள்ள வேண்டும். எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி.

அவரோட சேராதீங்க
அடுத்து இமான் அண்ணாச்சியை சந்திப்பீர்கள் என எதிர்பார்க்கிறோம். ஆனால் பலர், ஐக்கி ஏன் உங்களுக்கு என்னாச்சு. எதற்காக இவர் கூட போய் ஆடுறீங்க. இவர் கூட பழகாதீங்க. உங்களுக்கு டான்ஸ் பண்ண இவர் தான் கிடைச்சாரா. இவர் கூட சேர்ந்து உங்க பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள் என அபிஷேக்கிற்கு எதிராக கமெண்ட் செய்துள்ளனர்.

சர்ச்சை போட்டியாளர்
ஆரம்பம் முதலே சர்ச்சைக்குரியவராகவும், கன்டென்ட் கொடுப்பவராகவும் இருந்தவர் அபிஷேக் ராஜா. எவிக்ஷன் மூலம் நிகழ்ச்சியின் 21 வது நாளில் வெளியேற்றப்பட்ட அபிஷேக், வைல்ட் கார்டு என்ட்ரியாக 47 வது நாளில் மீண்டும் வீட்டிற்குள் சென்றார். மறுபடியும் பிரியங்கா உள்ளிட்டோரை இன்ஃபிளுயன்ஸ் செய்ததால் மீண்டும் வெளியேற்றப்பட்டார்.