புத்தாண்டே பிறக்கப் போகுது.. கங்குவா தயாரிப்பாளரை விடாமல் வெறுப்பேற்றும் ஃபேன்ஸ்.. அதுதான் மேட்டரா?
சென்னை: டிசம்பர் மாதம் இன்னும் சில மணி நேரங்களில் நிறைவடைந்து புத்தாண்டு 2025 பிறக்கப் போகிறது. ஆனால், நீங்கள் இன்னும் கங்குவா படத்தின் வெற்றி விழாவை கொண்டாடவே இல்லையே என ரசிகர்கள் சூர்யா நடித்த கங்குவா படத்தை தயாரித்த ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை பங்கம் பண்ணி வருகின்றனர்.
எப்படியாவது சூர்யாவுக்கு இந்த படத்தை பான் இந்தியா வெற்றிப் படமாக கொடுப்பேன் என நினைத்து பக்காவாக திட்டம் போட்டு சில மாதங்களுக்கு முன்னதாகவே மும்பையில் தனியாக அலுவலகத்தை எல்லாம் திறந்து வைத்து அங்கே 20 கோடி ரூபாய் செலவு செய்து புரமோஷன் எல்லாம் பண்ணி இவர் தான் சூர்யா என பாலிவுட் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

ஆனால், கடைசி வரைக்கும் அந்த சக்சஸ் மீட் நடக்கவே இல்லையே பாஸ் என புத்தாண்டு துவங்க உள்ள நிலையிலும் ட்ரோல்கள் அவரை டார்கெட் செய்து பறந்துக் கொண்டிருக்கின்றன.
கங்குவா காலக்கொடுமை: பான் இந்தியா படத்தை எடுக்க வேண்டும். பாகுபலி படத்துக்குப் போட்டியாக நாமும் ஒரு படத்தை இயக்கி ரசிகர்களை தியேட்டருக்கு கொண்டு வரவேண்டும் என்று எல்லாம் சூர்யா நினைத்ததில் எந்தவொரு தவறும் இல்லை. ஆனால், அண்ணாத்த படத்தை இயக்கி சூப்பர் ஸ்டாருக்கே அப்படியொரு ஃபிளாப் கொடுத்த இயக்குநரை நம்பி 300 கோடி பட்ஜெட்டில் அவரை விளையாட விட்டது தான் சூர்யா மற்றும் ஞானவேல் ராஜா பண்ண மிகப்பெரிய தவறு என்கின்றனர். 140 கோடி வரை நஷ்டம் அடைந்திருப்பதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
டிசம்பர் முடியப் போகுது பாஸ்: கங்குவா ஆடியோ வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நேரு ஸ்டேடியத்தில் நடத்தியிருந்தார் ஞானவேல் ராஜா. நிகழ்ச்சி முடிந்து நள்ளிரவு வீடு திரும்பிய ரசிகர்களுக்கு பிரியாணி எல்லாம் போட்டு அனுப்பியிருந்தார். அவர்கள் எல்லாம் தியேட்டருக்கு வந்து படம் பார்த்திருந்தால் கூட வசூல் வந்திருக்கும் ஆனால், டிசம்பரே முடியப்போகுது அந்த ஆடியோ லாஞ்ச் பாஸ் வைத்துக் கொண்டு காத்திருக்கிறேன். எப்போ தான் சக்சஸ் மீட் நடத்துவீங்க என ஞானவேல் ராஜாவை ரசிகர்கள் பங்கம் பண்ணி வருகின்றனர். கங்குவா படத்தின் தோல்வி காரணமாக இந்த ஆண்டு வரவேண்டிய கார்த்தியின் வா வாத்தியாரே படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு கூட வெளியாக வாய்ப்பில்லை என்கிற நிலையில் உள்ளது என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











