இதுக்காகவா வெயிட் பண்ணினோம்...ஐஸ்வர்யாவின் போஸ்டரை கலாய்க்கும் ரசிகர்கள்

சென்னை : டைரக்டர் மணிரத்னம் இயக்கிய வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் ரிலீசுக்கு தயாராக உள்ளது. செப்டம்பர் 30 ம் தேதி உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக படத்தை தியேட்டர்களில் ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என 5 மொழிகளில் பொன்னியின் செல்வன் ரிலீசாக உள்ளது. தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் படமாக பொன்னியின் செல்வன் உள்ளது.

இரண்டு பாகங்களாக தயார் செய்யப்பட்டுள்ள பொன்னியின் செல்வனின் முதல் பாகம் தயாராகி விட்டது. இரண்டாம் பாகத்தை 2023 ல் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.

டீசருக்காக காத்திருக்கும் ரசிகர்கள்

டீசருக்காக காத்திருக்கும் ரசிகர்கள்

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் டீசர் எப்போது வெளியிடப்படும் என ரசிகர்கள் பல மாதங்களாக காத்திருக்கிறார்கள். ஆனால் இதுவரை டீசர் ரிலீஸ் பற்றி எந்த தகவலையும் படக்குழு வெளியிடவில்லை. ஆனால் தஞ்சையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த டீசர் வெளியீட்டு விழா பிளான் கைவிடப்பட்டதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவி வருகிறது.

சென்னையில் டீசர் ரிலீசா

சென்னையில் டீசர் ரிலீசா

நிஜமாகவே படக்குழு தஞ்சையில் தான் டீசரை வெளியிட திட்டமிட்டதா என தெரியாது. ஆனால் தஞ்சை கோயில் சென்டிமென்ட் காரணமாக பலரும் பட விழாவில் பங்கேற்க தயங்கியதால் சென்னை நேரு ஸ்டேடியத்தில் டீசர் வெளியீட்டை நடத்த படக்குழு ஏற்பாடு செய்து வருவதாகவும், இந்த விழாவில் ரஜினி, கமல் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியானது.

போஸ்டர் வெளியிடும் படக்குழு

போஸ்டர் வெளியிடும் படக்குழு

ரசிகர்கள் டீசரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் படத்தின் ப்ரொமோஷனாக, முக்கிய கேரக்டர்களின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. தினம் ஒரு போஸ்டர் என்ற அடிப்படையில் முதல் நாளில் ஆதித்ய கரிகாலன் ரோலில் நடிக்கும் விக்ரமின் போஸ்டர், இரண்டாம் நாளில் வந்தியத் தேவன் ரோலில் நடிக்கும் கார்த்தியின் போஸ்டர் ஆகியன வெளியிடப்பட்டன.

எதிர்பாராமல் வந்த நந்தினி போஸ்டர்

எதிர்பாராமல் வந்த நந்தினி போஸ்டர்

இதனால் முன்றாவதாக அருண்மொழி தேவனான ராஜராஜ சோழனின் ரோலில் நடித்த ஜெயம் ரவியின் போஸ்டர் தான் வெளியிடப்படும் என ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக வில்லியான நந்தினி கேரக்டரில் நடிக்கும் ஐஸ்வர்யா ராயின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அழகான முகத்துடனான வில்லி என்ற கேப்ஷனுடன் படக்குழு இந்த போஸ்டரை வெளியிட்டது.

இதுக்காகவா வெயிட் பண்ணினோம்

இதுக்காகவா வெயிட் பண்ணினோம்

ஆனால் இதை பார்த்து ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர். இதை பார்ப்பதற்காகவா காத்திருந்தோம். ராஜராஜ சோழனை எங்கடா. அட்லீஸ்ட் த்ரிஷா போஸ்டரையாச்சும் வெளியிட்டிருக்கலாம். அருள்மொழி தேவன் போஸ்டர் எப்போ வரும் என பலரும் ஆர்வமாக கேட்டு வருகின்றனர்.இதற்கு சிலர் யானை மீது வரும் அருள்மொழி தேவன் போஸ்டர் மாஸாக இருக்க போகிறது. அதனால் தான் அதை இன்னும் வெளியிடாமல் வைத்துள்ளனர் என கூறி வருகின்றனர்.

Recommended Video

Ponniyin Selvan | பின் வாங்குற பேச்சுக்கே இடமில்லை *Kollywood | Filmibeat Tamil
ஐஸ்வர்யாவிற்கு பதில் அவரை போட்டிருக்கலாம்

ஐஸ்வர்யாவிற்கு பதில் அவரை போட்டிருக்கலாம்

ஐஸ்வர்யாவிற்கு பதில் கீர்த்தி சுரேஷை இந்த கேரக்டரில் நடிக்க வைத்திருக்கலாம் என பலர் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனால் விஷயம் தெரிந்தவர்கள், நாட்டிலேயே சிறந்த அழகி நந்தினி தான். அழகின் மொத்த உருவாக இருந்து வில்லித்தனமும் செய்வார். அதனால் ஐஸ்வர்யா ராய் தான் சரியான தேர்வு என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X