Don't Miss!
- News
‛ஆங்கிலேயர் அட்ராசிட்டினு’ ஏன் படம் எடுக்கல? பிபிசி ஆவணப்படத்தால் கொதித்த கேரளா ஆளுநர்.. ஆக்ரோஷம்!
- Finance
ஏலத்திற்கு வந்த டயானா-வின் வெல்வெட் கவுன்.. விலை மட்டும் கேட்காதீங்க..!
- Lifestyle
ஆண்களே! நீங்க செக்ஸ் சாட் பண்ணும்போது... இந்த தப்ப மட்டும் தெரியமா கூட பண்ணாதீங்க...!
- Automobiles
புதிய இன்னோவா காரின் புக்கிங் திடீரென நிறுத்தம்... இனிமேல் கிடைக்காதா? டொயோட்டா செய்த காரியத்தால் கலக்கம்!
- Technology
அம்மாடி.! ரூ.14000 வரை தள்ளுபடியா? Samsung டேப்லெட் வாங்க பெஸ்ட் நேரம் இதான் டோய்.!
- Sports
இந்தியா வெல்ல சூர்யகுமார் அதை செய்யனும்.. வாசிங்டன் சுந்தர் அதிரடிக்கு காரணம் -தினேஷ் கார்த்திக்
- Travel
உங்களது விமான டிக்கெட் டவுன்கிரேடு ஆகினால் 75% வரை டிக்கெட் கட்டணத்தை திரும்ப பெறலாம்!
- Education
TNTET 2022 paper 2 exam date :'டெட் பேப்பர் 2' தேர்வு அறிவிப்பு...!
பிகில் பட நடிகைக்கு ஹார்ட் விட்ட முரட்டு சிங்கிள் பிரேம்ஜி… கிண்டலடிக்கும் நெட்டிசன்ஸ்!
சென்னை : நடிகைக்கு ஹார்ட் விட்ட முரட்டு சிங்கிள் பிரேம்ஜியை, அவரின் தீவிர ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
நடிகர், பாடகர், இசையமைப்பாளர் என பல திறமைகளைக் கொண்ட பிரேம்ஜி அமரன் சிம்பு நடித்த வல்லவன் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
அந்த திரைப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் ரசிக்கும்படி இருந்தது.
விக்ஸ்
விளம்பரத்துக்காக
இப்படியா?
கீர்த்தி
சுரேஷின்
போஸ்ட்டை
பார்த்து
கலாய்க்கும்
ரசிகர்கள்!

டைமிங் காமெடி
சந்தோஷ் சுப்ரமணியன், சரோஜா,சிலம்பாட்டம்,கோவா, மங்காத்தா, பிரியாணி, கோவா, வடகறி, மாநாடு என வரிசையாக பலத் திரைப்படங்களில் நடித்துள்ளார் பிரேம்ஜி. இவரின் டைமிக் கமெடிக்கு என்றே இவருக்கு பல ரசிகர்கள் கூட்டம் உண்டு. தன்னை எப்போதும் முரட்டு சிங்கிள் என்று சொல்லிக்கொண்டு அவ்வப்போது சிங்கிள்ஸ்களை மகிழ்வித்து வருகிறார்.

கல்யாண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி
அண்மையில் பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக செய்திகள் இணையத்தில் பரவியது. இதனால், பிரேம்ஜியின் முரட்டு சிங்கிள் ரசிகர்கள் கவலை அடைந்த நிலையில், என் வாழ்க்கையில், கல்யாணம், லவ், உறவு என எதுவும் இல்லாமல் சிவனே என இருக்க தான் ஆசைப்படுகிறேன். அப்படி தான் இருக்கிறேன். இனியும் இருக்க போகிறேன் என பதிவிட்டு கல்யாண சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

நெட்டிசன்ஸ் கிண்டல்
இன்ஸ்டாகிராம்,ட்விட்டர் போன்றவற்றில் ஆக்டிவாக இருக்கும் பிரேம்ஜி, எந்த நடிகை என்ன போட்டோவை பதிவிட்டு இருந்தாலும், கொஞ்சம் கூட வெட்கமே படாமல் ஹார்ட் போட்டுவிடுவார். இதற்காக ரசிகர்கள் இவரை என்னத்தான் பங்கமாக கலாய்த்தாலும் மனுஷன் அதை கண்டுக்கொள்ளவே மாட்டார்.
Recommended Video

யாரையும் விடமாட்டபோல
பிகில் படத்தில் நடித்த அமிர்தா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். இதைப்பார்த்த நம்ம பிரேம்ஜி, அந்த நடிகைக்கு இதயம் துடிக்கும் GIF-ஐ பதிவு செய்துள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், என்ன... பிரேம்ஜி ஒரு நடிகையையும் விட்டுவைக்க மாட்டபோல என்றும், முரட்டு சிங்கிள்னு சொல்லிட்டு நீ பண்ற அட்டகாசம் தாங்கமுடியல என்றும் நெட்டிசன்ஸ் கிண்டலடித்து வருகின்றனர்.