Raakka: கடைசியில குருநாதர் கிட்டயே சுட்டுட்டாரா அட்லி.. அல்லு அர்ஜுனா? 'ஐ’ விக்ரமா? ‘ராக்கா’ ரகசியம்!
சென்னை: இயக்குநர் அட்லி இயக்கிய முதல் படமான ராஜ ராணி படத்தில் இருந்து அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய ஜவான் படம் வரை பல படங்களில் இருந்து இன்ஸ்பயர் ஆகி எடுக்கப்பட்டது தான் என அவரே ஒப்புக் கொண்டுள்ளார்.
சுட்டு சூப்பராக படம் எடுப்பதில் அட்லி ஒரு கெட்டிக்காரர் என்றே அவரை வஞ்சப்புகழ்ச்சி அணியில் பலரும் பாராட்டி வருகின்றனர். இதுவரை பெரிய சொதப்பல்கள் இல்லாமல் குருநாதரையே மிஞ்சிய சிஷ்யனாக ஷங்கரால் இதுவரையிலும் முடியாத 1000 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபீஸ் வசூல் படத்தை அட்லி ஜவான் படத்தின் மூலம் கொடுத்துள்ளார்.

இந்நிலையில், அல்லு அர்ஜுனை வைத்து அட்லி இயக்கவுள்ள புதிய படத்தின் டைட்டில் இன்று வெளியானது. 'ராக்கா' என்கிற டைட்டிலையும் அல்லு அர்ஜுனின் ராக்சஷ உருவத்தையும் பார்த்த ரசிகர்கள் 'ஐ' படத்தில் வரும் "என்னோடு நீயிருந்தால்" பாடல் காட்சியில் இருந்து அட்லி சுட்டுவிட்டார் என வழக்கம் போல ட்ரோல் செய்யத் தொடங்கியுள்ளனர்.
பியூட்டி அண்ட் தி பீஸ்ட்: இயக்குநர் ஷங்கரே பியூட்டி அண்ட் தி பீஸ்ட் படத்தின் கான்செப்ட்டை தழுவித்தான் ஐ படத்தையே உருவாக்கி இருப்பார். மேலும், அதை நினைவுப்படுத்தும் விதமாக "என்னோடு நீயிருந்தால்" பாடலில் சியான் விக்ரமுக்கு ராட்சத கெட்டப்பை போட்டு நடிக்க வைத்திருப்பார். அல்லு அர்ஜுனை வைத்து அட்லி இயக்கி வரும் ராக்கா திரைப்படமும் பியூட்டி அண்ட் தி பீஸ்ட் படத்தின் காப்பி மாதிரியே தெரிகிறது என்றும் இது ரொமாண்டிக் படமாக இருந்தால் அதே படம் தான் என இப்பவே விபூதி அடிக்க ஆரம்பித்து விட்டனர்.
குருநாதரிடமே கை வச்சிட்டாரா?: மணிரத்னம் இயக்கத்தில் வெளியான மெளன ராகம் தான் ராஜா ராணியாக மாறியது என பலரும் கலாய்த்தனர். சத்ரியன் படம் தான் தெறி என்றும் அபூர்வ சகோதரர்கள் தான் மெர்சல் என்றும் சக்தே இந்தியா தான் பிகில் என்றும் ட்ரோல்கள் பறந்தன. இந்நிலையில், ராக்கா படம் ஷங்கரின் ஐ படத்தில் இருந்து இன்ஸ்பயர் ஆன படமாக இருக்குமா? என ட்ரோல் செய்ய ஆரம்பித்துள்ளனர்.
அட்லியின் கனவுப்படம்: ஆனால், இயக்குநர் அட்லி இந்த ராக்கா படம் தனது கனவுப்படம் என்றும் 18 வருஷமா தனது மனதில் இருக்கும் படத்தைத் தான் பிரம்மாண்டமாக தற்போது அல்லு அர்ஜுனை வைத்து இயக்கி வருவதாக அறிவித்துள்ளார். படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வந்ததும் என்ன கதையை அட்லி 18 வருஷமாக மனதில் வைத்திருந்தார் என்பது தெரிந்து விடும்.


Click it and Unblock the Notifications











