மதகஜராஜா பட பூஜை போட்டப்ப இருந்தவங்க எல்லாரும்.. ரிலீசை தாறுமாறாக கலாய்க்கும் ரசிகர்கள்!

சென்னை: 12 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்ட விஷாலின் மத கஜ ராஜா படம் வரும் 12ம் தேதி பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2012ம் ஆண்டில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியிருந்த இந்தப்படம் 2013ம் ஆண்டில் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஜெமினி பிலிம் சர்கியூட் தயாரிப்பில் உருவாகியிருந்த இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் அஞ்சலி இருவரும் விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளனர். பல்வேறு தருணங்களில் இந்தப் படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்பட்டு பின்னர் ரிலீசாகாமல் போன நிலையில், தற்போது படம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

madha gaja raja movie vishal sundar c

மத கஜ ராஜா பட ரிலீஸ்: நடிகர் விஷால், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2012ம் ஆண்டில் சூட்டிங் துவங்கப்பட்ட படம் மத கஜ ராஜா. இந்தப் படத்தை சுந்தர் சி இயக்கியிருந்த நிலையில் ஜெமினி பிலிம் சர்கியூட் சார்பில் படம் தயாரிக்கப்பட்டிருந்தது. படம் 2013ம் ஆண்டிலேயே ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பல்வேறு காரணங்களால் படத்தின் ரிலீஸ் நிகழவே இல்லை. பல்வேறு தருணங்களில் படத்தின் ரிலீஸ்அறிவிக்கப்பட்டு பின்னர் பின்வாங்கிய நிகழ்வே தொடர்ந்து வந்தது. இந்நிலையில் தற்போது இந்தப் படம் வரும் ஜனவரி 12ம் தேதி பொங்கல் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

12 ஆண்டுகளுக்கு பிறகு ரிலீஸ்: 12 ஆண்டுகள் கழித்து இந்தப் படம் வெளியாகவுள்ள நிலையில் விரைவில் படத்தின் புதிய ட்ரெயிலரை படக்குழுவினர் வெளியிடவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சுந்தர் சிக்கே உரிய ஸ்டைலில் காமெடி கலாட்டாவாக முற்றிலும் கமர்ஷியல் ஜானரில் மத கஜ ராஜா படம் உருவாகியுள்ளது. இந்த முறை கண்டிப்பாக இந்தப் படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து சுந்தர் சியின் மனைவியும் பிரபல நடிகையுமான குஷ்பூவும் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். விஜய் ஆண்டனி இசையமைப்பில் இந்தப்படத்தின் இசை மற்றும் பாடல்களும் ரசிகர்களை சிறப்பாக என்டர்டெயின் செய்யும் என்று எதிர்பார்க்கலாம்.

கலாய்க்கும் ரசிகர்கள்: இதனிடையே இந்த அறிவிப்பு குறித்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அடுத்தடுத்த கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர். இந்தப் படத்தின் பூஜை போடப்பட்ட போது படத்தின் ஹீரோ விஷால், இயக்குநர் சுந்தர் சி, இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, காமெடியன் சந்தானம் என்று கூறியுள்ள ரசிகர்கள், தற்போது படம் ரிலீசாகும்போது விஷால் ஹீரோ, சுந்தர் சி ஹீரோ, விஜய் ஆண்டனி ஹீரோ மற்றும் சந்தானம் ஹீரோ என்பதை சுட்டிக் காட்டியுள்ளனர். காலம் வேகமாக சுற்றுவதாகவும் கலாய்த்துள்ளனர். 10 ஆண்டுகளுக்கு முன்பு சந்தானம் ஹீரோக்களுக்கு இணையாக நடித்து வந்தார்.

மீண்டும் சந்தானம் காமெடி: அடுத்தடுத்த படங்களில் சந்தானம் ஹீரோவாக மாறியுள்ளார். தில்லுக்கு துட்டு 2 உள்ளிட்ட படங்களில் தற்போது அவர் கவனம் செலுத்தி வருகிறார். மீண்டும் அவர் காமெடி டிராக்கில் பயணிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதற்கு மத கஜ ராஜா படம் சிறப்பான துவக்கமாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இதேபோல நடிகர் விஷால் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான மார்க் ஆண்டனி சிறப்பாக அமைந்த நிலையில், இந்தப் படம் அவருக்கு வொர்க் அவுட் ஆகுமா என்பதையும் சில தினங்களில் பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X