எங்கப்பா சங்கி கிடையாதுன்னு பேசிய ஐஸ்வர்யா.. அதே மேடையில் சனாதன கிளாஸ் எடுத்த ரஜினிகாந்த்!
சென்னை: எங்கப்பாவை எல்லாரும் சமீப காலமாக சங்கி என கிண்டல் பண்றாங்க, அது எனக்குப் பிடிக்கவே இல்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சங்கி இல்லைங்க, அப்படி அவர் சங்கியா இருந்தா லால் சலாம் படத்தில் மொய்தீன் பாயாக நடித்திருக்க மாட்டார் என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கோபத்துடன் கொந்தளித்து பேச பேச ரஜினிகாந்த் கண்கலங்கிய காட்சிகள் ரசிகர்களை கஷ்டப்படுத்தியது.
ஆனால், அதே மேடையில், பேச ஆரம்பித்த ரஜினிகாந்த் சனாதன தர்மத்தையும் இந்து மதத்தின் பழமையையும் வேதங்கள், உபநிஷதங்கள் குறித்து பெருமையாக பேசிய வீடியோவையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசிய வீடியோவையும் கம்பேர் செய்து நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

சங்கின்னு கிண்டல் பண்ணாதீங்க: நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் கூட ஆன்மிகத்தை தான் முன்னெடுத்த நிலையில், அவர் தொடர்ந்து இமய மலைக்குச் செல்வது, யோகி ஆதித்யநாத் காலில் விழுவது என ஆன்மிகத்தில் அதிக ஆர்வம் செலுத்தி வரும் நிலையில், அவரை சங்கி என நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எங்கப்பாவை சங்கின்னு சொல்லாதீங்க ரஜினிகாந்த் சங்கி இல்லை என்றும் அப்படி இருந்தால் இஸ்லாமியராக லால் சலாம் படத்தில் நடித்திருக்க மாட்டார் என பேசினார்.
முஸ்லீம், கிறிஸ்துவ மதங்களை விட: அதன் பின்னர் இறுதியாக பேசிய ரஜினிகாந்த் விஜய் பற்றியும், ஜெயிலர் படத்தின் வெற்றியும் லால் சலாம் கதை பற்றியும் அந்த படத்தில் தான் எப்படி நடிக்க வந்தேன் என்பது குறித்தும் தனுஷ் படத்தில் நடிக்க மறுத்தது என பல விஷயங்களை பேசிவிட்டு கடைசியாக மதநல்லிணக்கம் என பேச ஆரம்பித்தவர் திடீரென முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவ மதபங்களை ஸ்தாபகர்கள் உருவாக்கினர். ஆனால், இந்து மதத்தை எந்தவொரு ஸ்தாபகரும் உருவாக்கவில்லை என பேசியது அங்கிருந்தவர்களையே ஷாக் ஆக்கியது.

சனாதன கிளாஸ்: இந்து மதம்னா சனாதனம், சனதனம்னா புராதனம் அதுதான் ஆதி அதுதான் முதல் அந்த காலத்துல ரிஷிகள் இருந்தார்கள். அவர்கள் தியானம் செய்து எழுப்பிய ஒலிகள் தான் வேதங்களாகவும் உபனிஷதங்களாகவும் மாறின. வேதங்கள் புரியவில்லை என உபனிஷதங்கள் உருவாகின. அதையும் எளிமையாக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது தான் பகவத் கீதை. பரமாத்மா ஜீவாத்மாவுடன் பேசுவது தான் பகவத் கீதை. கிருஷ்ணர் பரமாத்மா, அர்ஜுனன் ஜீவாத்மா இதையெல்லாம் சொன்னாலும் பலருக்கு புரியாது. அதை தெரிஞ்சிக்க ஒரு ஞானம் வேண்டும் என பேசியிருந்தார் ரஜினிகாந்த்.
நெட்டிசன்கள்: இருந்தாலும் பொண்ணுக்காக லால் சலாம் மேடையில் இப்படி சனாதனம் பற்றி ரஜினிகாந்த் பேசியிருக்காமல் வேறு ஒரு நிகழ்ச்சியில் கூட பேசியிருக்கலாம். சங்கின்னு எங்கப்பாவை சொல்லாதீங்க, அவர் சங்கி இல்லை என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சொல்லி அரை மணி நேரம் கூட ஆகவில்லை. அதே மேடையில் மகளுக்கு நோஸ் கட் கொடுக்கும் விதமாக மற்ற மதங்களை விட இந்து மதம் எவ்வளவு பெரியது என்றும் சனாதனத்தை பற்றியும் ரஜினிகாந்த் பேசி விட்டாரே என நெட்டிசன்கள் இரண்டு வீடியோக்களையும் கம்பேர் செய்து A Few Moments Later என ட்ரோல் செய்து வருகின்றனர். அதேநேரம், இந்து மதம் குறித்து பேசுவதற்கும் சங்கி எனப்படும் தீவிரமான மத வெறிக்கும் இடையே வேறுபாடு உள்ளது. எனவே ரஜினி பேசியது தவறில்லை, அவர் தனது மதத்தின் புனிதங்களை மட்டுமே பேசினார் என்கிறார்கள் ரஜினிகாந்த் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











