அட்லீயை ஓவர்டேக் பண்ண அனிமல் இயக்குநர்!.. பாக்ஸ் ஆபிஸிலா மாமா.. காப்பியடிப்பதில் மாப்ள!

மும்பை: இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியான அனிமல் திரைப்படம் 700 கோடி வசூலை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தென்னிந்தியாவில் அந்த படம் பெரிதாக ஓடவில்லை என்றாலும், வட இந்தியாவிலேயே சக்கைப் போடு போட்டு வருகிறது.

இந்நிலையில், அந்த படத்தில் இடம்பெற்ற அந்த சுத்தியல் சண்டைக் காட்சி பிரபலமான படத்தில் இருந்து சுடப்பட்ட சீன் என்றும் அர்ஜுன் ரெட்டி படத்திலேயே அட்லீயை மிஞ்சுகிற அளவுக்கு சந்தீப் ரெட்டி ஹாலிவுட் படத்தில் இருந்து அப்படியே காப்பியடித்துள்ளார் என்றும் ரசிகர்கள் ஆதாரத்துடன் போஸ்ட் போட்டு அசிங்கப்படுத்தி வருகின்றனர்.

Fans trolls Animal Director Sandeep Reddy Vanga overtakes Atlee in copy cat

இந்த ஆண்டின் சிறந்த படம் ஜவான்: 2023ம் ஆண்டு இந்தியளவில் சிறந்த படமாக அட்லீ இயக்கிய ஜவான் படம் IMDB விருதை எல்லாம் வென்று சில ஹாலிவுட் விருது விழா நிகழ்ச்சிகளிலும் போட்டிப் போட்டு வருகிறது. ஹாலிவுட் படமான அப்போகலிப்டா, மூன் நைட் வெப்சீரிஸ் முதல் ஏகப்பட்ட கோலிவுட் படங்களை அப்பட்டமாக காப்பியடித்து இன்ஸ்பிரேஷன் எனும் பெயரில் காட்சிக்கு காட்சி மற்ற படங்களின் சூப்பர் ஹிட் சீன்களை அடுக்கி வைத்து அட்லீ ஜவான் படத்தை இயக்கியதாக கடும் விமர்சனங்கள் குவிந்த நிலையில், 1100 கோடி வசூல் ஈட்டி அந்த படம் தான் இந்த ஆண்டின் சிறந்த படமாக மாறியிருக்கிறது.

அனிமல் ஃபைட் சீன் காப்பி: சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியான அனிமல் திரைப்படம் 11 நாட்களில் 700 கோடி வசூலை ஈட்டி வார நாட்களிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக திரையுலகை அதிர வைத்து வருவதாக கூறுகின்றனர். இந்நிலையில், அந்த படத்தில் இடம்பெற்ற ஹைலைட்டான சண்டைக் காட்சி 2010ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான நாயகன் படத்தில் இருந்து அப்படியே சுடப்பட்டு வைக்கப்பட்ட சீன் என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

ஓல்டு பாய் தான் முன்னோடி: ஆனால், அந்த படத்திற்கே முன்னோடி கொரிய படமான ஓல்டு பாய் தான் என்றும் 2003ம் ஆண்டே அந்த படம் வெளியான நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதே போன்ற ஒரு சண்டைக் காட்சியை வைத்து பயங்கரமாக அட்லீயை போலவே சந்தீப் ரெட்டி வங்கா கல்லா கட்டி உள்ளார் என்றும் கூறுகின்றனர்.

அர்ஜுன் ரெட்டி காப்பி: மேலும், சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜுன் ரெட்டி படத்தில் ஹீரோயினை அவரது வீட்டுக்கே சென்று திட்டும் காட்சி அப்படியே ஹாலிவுட் படமான Goodfellas படத்தில் இருந்து சுடப்பட்ட சீன் என்றும் ரசிகர்கள் போட்டு பொளந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X