தேவரா 2வது சிங்கிள்.. மாட்டிக்கினாரு ஒருத்தரு அவரை காப்பாத்தணும் கர்த்தரு.. காப்பி அடித்தாரா அனிருத்

சென்னை: அனிருத்தான் தற்போது கோலிவுட்டின் நம்பர் ஒன் இசையமைப்பாளராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பிஸியாகியிருக்கிறார் அவர். அவரது இசையமைப்பில் அடுத்ததாக வேட்டையன், விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஒரு படம் என வரிசையாக ரிலீஸாகவிருக்கின்றன. இந்தச் சூழலில் அவர் இசையமைத்திருக்கும் தேவரா படத்தில் இடம்பெற்றிருக்கும் இரண்டாவது சிங்கிள் சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.

கோலிவுட்டில் இப்போதைக்கு பிஸியான இசையமைப்பாளர் என்றால் அது அனிருத்தான். 3 படத்தின் மூலம் அறிமுகமாகி ஒய் திஸ் கொலை வெறி டி பாடல் மூலம் ஓவர் நைட்டில் ஒபாமா ஆன அவர் அடுத்தடுத்து பல படங்களுக்கு இசையமைத்து ஹிட்டடித்தார். இதன் காரணமாக அனிருத் இல்லாமல் சினிமாவில் அனுவும் அசையாது என்ற நிலை உருவாகியிருக்கிறது.

Devara Anirudh

முன்னணி ஹீரோக்கள்: ஏ.ஆர்.ரஹ்மான் 90களில் எப்படி தமிழ் சினிமாவை ஆட்சி செய்தாரோ அதேபோல்தான் அனிருத்தும் இப்போது இருக்கிறார். ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு அனிருத்தே இசையமைக்கிறார். ஏன் இந்தியன்2வில்கூட அனிருத்தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயிலர் வெற்றி விழாவில் பேசிய ரஜினிகாந்த்கூட, அனிருத் இந்தப் படத்தை அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து சென்றுவிட்டார் என்று கூறி ஆச்சரியப்படுத்தினார்.

ஹிந்தியில் அனிருத்: தமிழில் தனது சாம்ராஜ்ஜியத்தை வலுவாக்கி வைத்திருக்கும் அனிருத் அட்லீ இயக்கத்தில் உருவான ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியிலும் எண்ட்ரி கொடுத்திருக்கிறார். படத்துக்கு கலவையான விமர்சனங்கள் தமிழ்நாட்டில் கிடைத்தாலும் பாலிவுட்டில் நல்ல வரவேற்பு கிடைத்தது.முக்கியமாக அனிருத்தின் இசை பெரிதளவில் கொண்டாடப்பட்டது. மேற்கொண்டு சில வாய்ப்புகள் அவருக்கு கிடைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அடுத்தடுத்த படங்கள்: அனிருத்தை பொறுத்தவரை வரிசையாக படங்களுக்கு இசையமைத்துவருகிறார். அதன்படி ஜெயிலர், ஜவான், லியோ ஆகிய படங்கள்
கடந்த வருடத்தில் அடுத்தடுத்த மாதங்களில் ரிலீஸாகின. மேலும் பிஸியாக வலம் வந்துகொண்டிருக்கும அனிருத் தனது சம்பளத்தையும் பத்து கோடி ரூபாயாக உயர்த்திவிட்டார் என்ற தகவலும் கோடம்பாக்கத்தில் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் 2: அனிருத்தின் இசையமைப்பில் கடைசியாக இந்தியன் 2 திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தின் முதல் பாகத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை பக்கபலமாக இருந்தது. ஆனால் இரண்டாவது பாகத்திலோ அனிருத்தின் சுத்தமாக செட் ஆகவில்லை என்று பலர் வெளிப்படையாகவே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள். அவரது இசையமைப்பில் அடுத்ததாக அடுத்ததாக ரஜினியின் வேட்டையன், கூலி, விஜய் தேவரகொண்டா நடிக்கும் ஒரு படம் என வரிசையாக வெளியாகவிருக்கின்றன.

தேவரா: இந்நிலையில் அனிருத்தின் இசையில் தேவரா படம் உருவாகியிருக்கிறது. அதில் ஜூனியர் என்.டிஆர் - ஜான்வி கபூர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். அந்தப் படத்திலிருந்து இரண்டாவது சிங்கிள் நேற்று வெளியானது. ஆனால் அந்தப் பாடல் இப்போது சர்ச்சையில் சிக்கியிருக்கிறது. அதாவது பொதுவாகவே அனிருத் வேறு பாடல் ட்யூனை எடுத்து பட்டி டிங்கரிங் செய்து புது பாடலை உருவாக்குவார் என்று குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே இருக்கிறது. இப்போது வெளியாகியிருக்கும் செகண்ட் சிங்கிளையும் இலங்கையில் உருவான மனிகே மஹே என்ற ஆல்பம் பாடலிலிருந்துதான் உருவாக்கியிருக்கிறார் என்று அந்தப் பாடலையும், இந்தப் பாடலையும் கம்ப்பேர் செய்து நெட்டிசன்ஸ் சமூக வலைதளங்களில் பேசிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X