டிக்கெட் வித்ததுக்கு அப்புறம் தான் டிரைலரா?.. பராசக்தியை வீழ்த்த ஜன நாயகன் டீமின் பக்கா பிளான்?
சென்னை: ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று முடிந்த நிலையில், கடைசி வரைக்கும் ஜூக் பாக்ஸை அந்த நிகழ்ச்சியில் வெளியிடவில்லையே என கேவிஎன் தயாரிப்பு நிறுவனத்தை விஜய் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
புத்தாண்டை முன்னிட்டு கண்டிப்பாக ஜன நாயகன் படத்தின் டீசர் அல்லது டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், "நல்லாருப்போம்.. நல்லாருப்போம்.. எல்லாரும் நல்லா இருப்போம்" என்கிற ஒரே ஒரு போஸ்ட்டை மட்டுமே விஜய் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், ஜன நாயகன் படத்தின் டிக்கெட் புக்கிங் ஓபனாகி அது ஹவுஸ்ஃபுல் ஆன பிறகு தான் டிரைலர் வெளியாகுமா? என்றும் ஜன நாயகன் படத்தின் இடைவேளையில் டிரைலரை போடுவார்களோ என தளபதி ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
விஜய்க்கு நேரடி சவால் விடும் சிவகார்த்திகேயன்: பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்காத முன்பே வரும் ஞாயிற்றுக்கிழமை விஜய்யின் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பாவதற்கு முன்பாகவே பராசக்தி ஆடியோ வெளியீட்டு விழா ஒளிபரப்பாகும் என சிவகார்த்திகேயன் பேசிய வீடியோவை பார்த்த ரசிகர்கள் சிவகார்த்திகேயனின் தில்லுக்கு ராயல் சல்யூட் என்றும் விஜய்க்கு நேரடியாக சவால் விடுகிறாரே சிவகார்த்திகேயன், அப்போ படத்தில் செம கன்டென்ட் இருக்கும்போல தெரிகிறதே என்கின்றனர்.
டிக்கெட் வித்ததுக்கு அப்புறம் டிரைலர்: லியோ படம் கடைசி வரைக்கும் எல்சியூவா? இல்லையா? ஹிஸ்டரி ஆஃப் வயலென்ஸ் படத்தின் ரீமேக்கா? இல்லையா? என்கிற குழப்பத்துடனே படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கி விற்றுத் தீர்ந்தன. இந்நிலையில், ஜன நாயகன் பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்கா? இல்லையா? என்பது தெரிந்து விடக் கூடாது என்பதற்காகவே டீசர் அல்லது டிரைலரை வெளியிடாமல் உள்ளனர் என்றும் ஜன நயாகன் டிக்கெ புக்கிங்கை ஏற்கனவே வெளிநாடுகளில் ஓபன் செய்து கல்லா கட்டி வரும் நிலையில், இங்கேயும் டிக்கெட் விற்பனை நடந்த பிறகு தான் டிரைலர் வெளியாகுமா? என ரசிகர்கள் கலாய்க்கத் தொடங்கி விட்டனர்.
கேசரியாக இருந்தாலும்: வில்லன் காஸ்ட்யூம் மிலிட்ரி லுக் மற்றும் பூஜா ஹெக்டே பத்திரிகையாளர் என சில புகைப்படங்கள் இந்த படம் பகவந்த் கேசரி இல்லை என நம்ப வைத்தாலும், விஜய்யின் லுக், மமிதா பைஜு கையில் செங்கல் உடன் கிளைமேக்ஸில் சண்டையிடும் காட்சிகள் வெளியான நிலையில், கண்டிப்பாக இது பகவந்த் கேசரி தான் என்கின்றனர். கேசரியாகவே இருந்தாலும் கில்லி, போக்கிரி படங்களை போல ஜன நாயகன் கலெக்ஷனை அள்ளும் என தளபதி ரசிகர்கள் உறுதியாக உள்ளனர். ஜனநாயகன் டிரைலர் அப்டேட்டை கேவிஎன் நிறுவனம் சீக்கிரம் வெளியிட்டால் நல்லா இருக்கும்.


Click it and Unblock the Notifications











