Trisha: குந்தவையை குனிந்து பார்க்கலாமா.. வந்தியத்தேவா பார்வை ரொம்ப தப்பா இருக்கே..ரசிகர்கள் ரகளை!

சென்னை: பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் இன்னும் 3 நாட்களில் வெளியாக உள்ள நிலையில், அதற்கான சூறாவளி சுற்றுப்பயணத்தை பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சோபிதா துலிபாலா உள்ளிட்ட நடிகர்கள் செய்து வருகின்றனர்.

மும்பை நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராயும் கலந்து கொண்டார். இந்நிலையில், நடிகர் கார்த்தி மற்றும் த்ரிஷா எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் அந்த போட்டோக்களை பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.

எம்ஜிஆர், ரஜினி, விஜய்க்கு மிஸ்ஸான ரோல்: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தி நடித்துள்ளார். வந்தியத்தேவனாக எம்ஜிஆர் நடிக்க விரும்பினார். ரஜினிகாந்த் அந்த கதாபாத்திரத்தில் நடித்தால் சிறப்பாக இருக்கும் என ஜெயலலிதா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இயக்குநர் மணிரத்னத்தின் முதல் சாய்ஸே அந்த கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் நடிக்க வேண்டும் என்பது தான்.

இப்படி பல முன்னணி நடிகர்கள் நடிக்க விரும்பிய, நடிக்க வேண்டிய அந்த கதாபாத்திரம் கடைசியில் கார்த்தியிடம் கிடைத்ததே அவருக்கு பெரிய அங்கீகாரமாக மாறியது. கிடைத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக குதிரையேற்றம், வாள் சண்டை, ஜாக்கி சான் போல தாவி, தப்பித்து சண்டைப் போடுவது, பெண்களிடம் அசடு வழிவது என அமரர் கல்கி எழுதிய வந்தியத்தேவன் கதாபாத்திரத்தை திரையில் காட்டி விட்டார் கார்த்தி.

உயிர் உங்களுடையது தேவி: ஆதித்த கரிகாலன், அருள்மொழி வர்மனின் சகோதரியான குந்தவை கதாபாத்திரத்தில் கச்சிதமாக த்ரிஷா பொருந்தி நடித்துள்ளார்.
இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடி த்ரிஷா தான். சியான் விக்ரம், ஜெயம் ரவி உடன் பல படங்களில் ஜோடிப் போட்டு நடித்த த்ரிஷாவுக்கு இந்த படத்தில் அவர்கள் இருவருக்கும் சகோதரியாக நடிக்க வேண்டிய தர்ம சங்கடமான சூழல் நிலவியது குறித்து அவரே பேட்டிகளில் பேசி உள்ளார்.

மாடர்ன் உடையில் வந்தியத்தேவனும் குந்தவையும்: பொன்னியின் செல்வன் 2 படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பல இடங்களுக்கு பறந்து பறந்து சென்று கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் வந்தியத்தேவனும் குந்தவையும் மாடர்ன் உடையில் செம மாஸாக எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை நடிகை த்ரிஷா தனது சமூக வலைதள பக்கங்களில் "VT and Kun" என பதிவிட்டுள்ளார்.

Fans trolls Karthi and Trisha for their latest photos during Ponniyin Selvan 2 promotions

தப்புத் தப்பா தெரியுது த்ரிஷா: நடிகை த்ரிஷாவின் அந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் எக்கச்சக்கமாக ட்ரோல் கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர். இந்த நெட்டிசன், "ஏதோ தப்புத் தப்பா தெரியுது த்ரிஷா" என பதிவிட்டுள்ளார்.

Fans trolls Karthi and Trisha for their latest photos during Ponniyin Selvan 2 promotions

வந்தியத்தேவன் பார்வை சரியில்லையே: குந்தவையை ஏன் குனிந்து அப்படி பார்க்குறீங்க வந்தியத்தேவா.. உங்க பார்வை சரியில்லையே என சீமராஜா படத்தின் போட்டோ மீம்களையே போட்டு வெளுத்து வாங்கி வருகின்றனர் ரசிகர்கள்.

மேலும், கடைசி வரைக்கும் பொன்னியின் செல்வன் படத்துக்கு ப்ரோமோஷன் பண்ண மாட்டீங்க என்றும் அழகு தலைவி த்ரிஷா செம க்யூட், இருவரும் தனியா ஒரு படத்தில் ஜோடி போட்டு நடிக்கணும் என்றும் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

Fans trolls Karthi and Trisha for their latest photos during Ponniyin Selvan 2 promotions

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X