என்ன பெரிய மஞ்சுமெல் பாய்ஸ்.. விஜயகாந்த், வடிவேலு அப்பவே இதை பண்ணிட்டாங்க.. கலாய்க்கும் ஃபேன்ஸ்!

சென்னை: மலையாளத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் கேரளாவில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து டிரெண்டாகி வருகிறது. இன்னும் அந்த படத்தை பார்க்கவில்லையா? உடனடியா போய் பாருங்க என பார்ப்பவர்கள் எல்லாம் டார்ச்சர் பண்ணும் அளவுக்கு அந்த படம் கோலிவுட் படங்களை ஓரங்கட்டி விட்டு அந்த படம் ஹிட் அடித்து வருகிறது.

அந்தளவுக்கு மெனக்கெட்டு பல வேலைகளை படத்தில் பார்த்துள்ளார் இயக்குநர் சிதம்பரம். குணா படத்தையே கண்டுக்கொள்ளாத ரசிகர்கள் தற்போது அந்த படம் ரீ ரிலீஸ் செய்தால் வேறலெவலில் பார்த்து ஹிட் ஆக்கி விடுவார்கள் போல அந்தளவுக்கு குணா பற்றியும் குணா குகை பற்றியும் ஆர்வமாகி உள்ளனர்.

Fans trolls Manjummel Boys movie with Vijayakanth s Engal Anna scene

மாஸ் காட்டும் மஞ்சுமெல் பாய்ஸ்: ஹீரோக்களை எல்லாம் பார்த்து தான் ரசிகர்கள் தியேட்டருக்கு செல்கின்றனர் என லோ பட்ஜெட்டில் கன்டென்ட் ஸ்ட்ராங் இல்லாத படங்களை இயக்கி விட்டு பலரும் புலம்பி வருகின்றனர். பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே படத்தை ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக சென்று பார்த்தனர். வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் அடித்தது. மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் நடித்த பலரை இதற்கு முன் ரசிகர்கள் பார்த்திராத நிலையில், அந்த படத்தையும் அதில் நடித்தவர்களையும் ரசிகர்கள் மொழி வேற்றுமையை கடந்து கொண்டாடி வருகின்றனர். நல்ல சினிமா என்றுமே ஜெயிக்கும் என்பதற்கு உதாரணமாகவே இது உள்ளது. குணாவை கொண்டாடதவர்களையும் தற்போது இந்த படம் குணாவையும் சேர்த்து கொண்டாட வைத்திருக்கிறது.

சென்னையிலேயே ஹவுஸ்ஃபுல்: நல்ல படங்களை இயக்குநர்கள் கொடுத்தால் நிச்சயம் ரசிகர்களை அதை தியேட்டர்களில் பார்க்க மிஸ் பண்ண மாட்டாங்க என்பதற்கு மஞ்சுமெல் பாய்ஸ் படமும் ஒரு உதாரணமாக மாறியிருக்கிறது. சென்னையிலும் நைட் ஷோக்கள் எல்லாம் ஹவுஸ்ஃபுல்லாக மாறி வருகிறது.

விஜயகாந்த் படத்துலயே: அதே நேரத்தில் மஞ்சுமெல் பாய்ஸ் வைத்து ஏகப்பட்ட ட்ரோல்களும், ரீல்களும், மீம்களும் டிரெண்டாகி வருகின்றன. அதிலும், இந்த படத்தை விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் ஒரு சீனுடன் ஒப்பிட்டு மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் கிளைமேக்ஸே இவ்வளவு தான் என ஸ்பாய்லர் செய்து வருகின்றனர். மஞ்சுமெல் பாய்ஸ் படம் கிடைக்கல, பாய்ஸ் மேல மஞ்சு படம் தான் கிடைச்சது என்றும் ஏகப்பட்ட மீம்களும் டிரெண்டாகி வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X