Don't Miss!
- Technology
போச்சு! WhatsApp-இல் இருந்தே ஒரே ஒரு உளவு பார்க்குற மேட்டரும் இப்போ போச்சு!
- Lifestyle
இந்த 5 ராசிக்காரங்கள செல்வமும், புகழும் தேடி வருமாம்... இந்த அதிர்ஷ்ட ராசிகளில் உங்க ராசி இருக்கா?
- News
மீண்டும் ஏறுமுகத்தில் கொரோனா! 24 மணி நேரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? முழு விபரம் இதோ!
- Finance
இலங்கை பணவீக்கம் 54.6%, பாகிஸ்தானில் 21.3%.. அப்போ இந்தியா..? ரெடியா இருங்க மக்களே!!
- Automobiles
மவுசு துளியளவும் குறையல... மிக குறுகிய காலத்தில் 1.4 மில்லியன் டூ-வீலர்களை விற்பனை செய்த ஹீரோ! தரமான சம்பவம்!
- Sports
கேப்டனாக தினேஷ் கார்த்திக்கிற்கு முதல் வெற்றி.. பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அபாரம்.. முழு விவரம்
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
20 நாட்களை கடந்த விக்ரம்.. 25 நாள் எப்படி ஆச்சுன்னு தெரியலையே.. கமலின் ராஜ்கமல் வெளியிட்ட போஸ்டர்!
சென்னை : நடிகர் கமல் மற்றும் ஏராளமான நடிகர்களை கொண்டு விக்ரம் படம் கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படத்திற்கு ரசிகர்கள் சிறப்பான ஆதரவை அளித்து வருகின்றனர். படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
இந்நிலையில் படம் வெற்றிகரமான 25வது நாள் கொண்டாட்டம் குறித்து கமலின் ராஜ்கமல் நிறுவனம் போஸ்டர் வெளியிட்டுள்ளது.
இவரு
அட்லிக்கே
அண்ணன்
போல..
ஜெயிலர்
எந்த
ஹாலிவுட்
படத்தின்
காப்பி
தெரியுமா?
லீக்கான
தகவல்!

கமலின் விக்ரம் படம்
நடிகர்கள் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் உள்ளிட்டவர்களின் மிரட்டலான நடிப்பில் கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் வெளியானது விக்ரம் படம். கோலிவுட்டில் ஆர்ஆர்ஆர், கேஜிஎப், பாகுபலி, பாகுபலி 2 போன்ற படங்கள் கடந்த சில ஆண்டுகளில் வசூல் வேட்டை நடத்தி வந்துள்ளன.

வசூல் சாதனையில் விக்ரம்
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் சினிமா முன்னணி நாயகர்களின் படங்கள் சொதப்பின. வசூலில் ஓரளவிற்கு பிக்கப் செய்தாலும், அவையெல்லாம் அந்த நடிகர்களுக்கான சிறப்பே தவிர படங்கள் சொதப்பலையே சந்தித்தன. சிறப்பான தமிழ் படங்கள் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்ட நிலையில் தற்போது விக்ரம் படம் அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.

திரையரங்குகளில் 20 நாட்கள்
விக்ரம் படம் கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஜூலை 2வது வாரத்தில் ஓடிடியில் வெளியாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது 20 நாட்களை கடந்து இந்தப் படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது. இந்தப் படத்தின் அதிரி புதிரியான வெற்றி தற்போது தமிழ் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் உற்சாகம்
தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் தளபதி 67, கைதி 2, விக்ரம் 3 என அடுத்தடுத்த கதைக்களங்களில் தன்னை ஈடுபடுத்தவுள்ளார். இதனால் ரசிகர்களின் உற்சாகம் மேலும் அதிகரித்துள்ளது. இந்தப் படங்களின் மூலம் மீண்டும் உலக சினிமாக்களுக்கு இணையாக தமிழ்ப் படங்களும் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

25வது நாள் கொண்டாட்ட போஸ்டர்
திரையரங்குகளில் 20 நாட்களை விக்ரம் படம் கடந்துள்ளது. ஆனால் படத்தை தயாரித்துள்ள ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இன்றைய தினம் படம் சர்வதேச அளவில் 25வது நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக போஸ்டர் வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

அவசரம் என்ன?
படம் வெளியாகி 20 நாட்களை மட்டுமே கடந்துள்ளது. இன்றைய தினம் 21வது நாள் மட்டுமே ஆகியுள்ளது. இந்நிலையில் அதற்குள் அவசர அவசரமாக 25வது நாள் கொண்டாட்டம் என போஸ்டர் வெளியிட்டுள்ளது கமலின் தயாரிப்பு நிறுவனம். இந்தப் படத்தின் வெற்றி கமலை மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளாக்கியுள்ளதன் வெளிப்பாடாக இந்த போஸ்டர் தற்போது கருதப்படுகிறது.

ரசிகர்கள் கமெண்ட்
இதையொட்டி ரசிகர்கள் இந்த போஸ்டின் கீழ் கமெண்ட் செய்து வருகின்றனர். இவ்வளவு பெரிய நிறுவனம், மிஸ்டர் ஜீனியசாக போற்றப்படும் உலகநாயகனின் பார்வைக்கு இந்த விஷயங்கள் செல்லாமல் போனது எப்படி என்பது குறித்தும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். எது எப்படியோ 25 நாட்களை திரையரங்கில் கண்டிப்பாக விக்ரம் படம் எட்டும். ஆனால் அது இன்று அல்ல என்பதே ரசிகர்களின் வாதம்.