சிவகார்த்திகேயன், சிம்புவுக்கு படம் தயாரிக்கும் கமல்.. சொந்த மகள்களுக்கே யோசிக்கும் சூப்பர் ஸ்டார்!
சென்னை: இந்திய சினிமாவே சூப்பர் ஸ்டார் என்று சொன்னால் பாலிவுட் நடிகர்கள் முதல் டோலிவுட் நடிகர்கள் வரை ரஜினிகாந்தின் பெயரைத்தான் உச்சரிப்பார்கள். அவருடைய ஸ்டைல், கரிஷ்மா, ஸ்பீடு பார்த்து இந்த வயதிலும் அவர் கடுமையாக உழைத்து வெற்றி நாயகனாக வலம் வருவதை பார்த்து அனைவரும் ஆச்சர்யப்படத்தான் செய்வார்கள்.
லால் சலாம், வேட்டையன், தலைவர் 171 இன்னும் நிறைய படங்கள் என இப்போதும் சினிமாவுக்காக தனது உடல் பொருள் ஆவி என அனைத்தையும் கொடுத்து வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சினிமாவுக்கு பொருள் ரீதியாக உதவி செய்ய ஏன் மறுக்கிறார் என்கிற கேள்வி சமீபத்தில் லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசியதன் பின்னர் சமூக வலைதளங்களில் சர்ச்சையாக வெடித்து வருகிறது.

சங்கி அல்ல கஞ்சன்: நடிகர் ரஜினிகாந்தை சங்கி என சொல்றாங்க என அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் பேசியதன் பின்னர் தான் பலரும் ரஜினிகாந்தை வெளிப்படையாக அந்த வார்த்தையை சொல்லி கலாய்க்க ஆரம்பித்துள்ளனர். ஆனால், அதன் பின்னர் ரஜினிகாந்த் பேசியதை பார்த்த நெட்டிசன்கள் ரஜினிகாந்த் கண்டிப்பாக சங்கி கிடையாது என்றும் அவர் ஒரு கஞ்சன் என இன்னொரு சர்ச்சையையும் கிளப்பி உள்ளனர்.
பாபாவில் வாங்கிய அடி: நடிகர் ரஜினிகாந்த் தனது ஆன்மிகத்தின் மீதுள்ள அதீத பற்றின் காரணமாக பாபா படத்தை தயாரித்து நடித்திருந்தார். பாபாஜி என்பவரை தமிழ்நாட்டு மக்களுக்கு 2002ல் அறிமுகப்படுத்தியதே அந்த படம் தான். படம் ரிலீஸுக்கு முன்பாக கதம் கதம் வசனமும் பாபா முத்திரையும் பெரியளவில் ஃபேமஸ் ஆனது. ஆனால், படம் வெளியான பின்னர் அதில் சொல்லப்பட்ட சில கருத்துக்கள் ரசிகர்களுக்கு பிடிக்காமல் போக அந்த படம் படுதோல்வியை சந்தித்தது. அந்த படத்தின் தோல்வியால் அப்செட்டான ரஜினிகாந்த் அதன் பின்னர் இனிமேல் தயாரிக்கப் போவதில்லை என முடிவு செய்து விட்டதாக லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்தே பேசியிருந்தார்.

சிவகார்த்திகேயன் படம்: அதே நேரத்தில் ரஜினிகாந்தின் நண்பரும் அவரது போட்டியாளருமான கமல்ஹாசன் ராஜ்கமல் நிறுவனம் தொடங்கி பல படங்களை தயாரித்துள்ளார். கமல் படங்களை தாண்டி தற்போது சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில் உருவாகி உள்ள எஸ்கே 21 படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். விரைவில் அந்த படம் திரைக்கு வர உள்ளது.
சிம்புவை வைத்து 100 கோடி பட்ஜெட்டில்: சிவகார்த்திகேயனை வைத்து மட்டுமல்ல சிம்புவை வைத்து 100 கோடி பட்ஜெட்டில் தேசிங் பெரியசாமி இயக்கவுள்ள ஹிஸ்டாரிக்கல் படத்தையும் கமல்ஹாசன் தயாரித்து வருகிறார். ரஜினிகாந்த் காக்க வைத்து வேண்டாம் என்று ஒதுக்கிய தேசிங் பெரியசாமியின் படத்தையே கமல்ஹாசன் நம்பி தனது பேனரில் தயாரிக்கிறார்.
மகள் ஸ்ருதிஹாசனுக்காக: மேலும், தனது மகள் ஸ்ருதிஹாசன் இசையமைத்து இயக்கி உள்ள ஆல்பம் பாடல் ஒன்றையும் தனது ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார் கமல்ஹாசன். அந்த ஆல்பம் பாடல் வெற்றி பெற வேண்டும் என அதில், தனது சிஷ்யன் லோகேஷ் கனகராஜையும் சேர்த்து இருக்கிறார்.

மகள்களுக்கே நோ: வேட்டையன், தலைவர் 171 உள்ளிட்ட படங்களுக்கு 150 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்கி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் படத்தை தயாரிக்கவில்லை. அடுத்து செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கவுள்ள புதிய படத்தையும் தயாரிக்கப் போவதில்லை என்கிற தகவல்கள் வெளியான நிலையில், ரஜினிகாந்த் மீது சோஷியல் மீடியாவில் கடும் விமர்சனங்கள் கிளம்பி வருகின்றன. சினிமாவில் லாப, நஷ்டம் சகஜம் தான் இந்த வயதிலும் டப்பு தான் முக்கியம் என இருக்கக் கூடாது என்றும் கமெண்ட் அடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











