Moideen Bhai Rajinikanth - என்னடா இது மொய்தீன் பாய் ரஜினிக்கு மகளால் வந்த சோதனை - ரசிகர்கள் விமர்சனம்

சென்னை: Moideen Bhai Rajinikanth (மொய்தீன் பாய் ரஜினிகாந்த்) ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் மொய்தீன் பாய் கேரக்டர் போஸ்டர் நள்ளிரவு வெளியிடப்பட்டது.

ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில வருடங்களுக்கு முன்னர் இருவரும் பிரிவதாக அறிவித்தனர். தனுஷுடன் அவர் வாழ்ந்தபோது இயக்குநர் அவதாரம் எடுத்து 3 படத்தை இயக்கினார். அந்தப் படம் வணிக ரீதியாக வெற்றிப்பெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்றது. இதனையடுத்து கௌதம் கார்த்திக்கை வைத்து வை ராஜா வை படத்தை இயக்கினார். அப்படம் தோல்வியடைந்தது.

 Fans Trolls Rajinikanths Modieen Bhai Get up in Lal salaam Movie

பிரிவுக்கு பின் உழைப்பு: தனுஷுடனான பிரிவுக்கு பிறகு திரைப்படம் இயக்குவதில் மும்முரமாகியிருக்கிறார் ஐஸ்வர்யா. அந்தவகையில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோரை வைத்து லால் சலாம் படத்தை இயக்கிவருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினிகாந்த்தும் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். படத்தின் முதல் ஷெட்யூல் சமீபத்தில் முடிவடைந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.

மொய்தீன் பாய் ரஜினிகாந்த்: லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் இஸ்லாமியர் கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் ஏற்கனவே வெளியாகியிருந்தன. அதனை உறுதிப்படுத்தும்வகையில் நள்ளிரவு 1 மணிக்கு ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டு மொய்தீன் பாய் ஆட்டம் ஆரம்பம் என போஸ்டரும் வெளியானது. அந்தப் போஸ்டரில் ரஜினிகாந்த் மும்பையில் நடந்துவருவது போல் ஸ்டில் இருந்தது.

 Fans Trolls Rajinikanths Modieen Bhai Get up in Lal salaam Movie

ரசிகர்களிடம் எகிறிய எதிர்பார்ப்பு: ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் அதுவும் இளம் ஹீரோக்கள் நடிக்கும் படத்தில் நடிக்கிறார் என்றதுமே அந்தக் கதாபாத்திரத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. அதுமட்டுமின்றி இஸ்லாமியர் கதாபாத்திரத்தில் பாட்ஷா படத்துக்கு பிறகு ரஜினி நடிக்கிறார் என்பதால் எதிர்பார்ப்பு பலமடங்கு எகிறியது. எனவே ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் லுக்கை மாஸாக வெளியிடுவார் என ரசிகர்கள் நம்பினர்.

ஜக்குபாய் பாதி பாட்ஷா பாய் பாதி கலந்து செய்த மொய்தீன் பாய்: ஆனால் மொய்தீன் பாய் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் அப்செட்டை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் ரசிகர்களில் ஒரு தரப்பினர் பீஸ்ட் படத்தில் விஜய்யை செய்தது போல் ஜெயிலரில் ரஜினியை நெல்சன் செய்துவிடுவாரோ என பயந்தோம். ஆனால் அவர் உருவாக்கிய க்ளிம்ப்ஸை பார்க்கையில் அந்த பயம் போய்விட்டது.

 Fans Trolls Rajinikanths Modieen Bhai Get up in Lal salaam Movie

அதேசமயம், ஐஸ்வர்யா தனது தந்தைக்கு தரமான போஸ்டரை வெளியிடுவார் என நம்பினோம். ஆனால், அவரோ ஜக்குபாயையும், பாட்ஷா பாயையும் கலந்து கடமைக்கு ஒரு போஸ்டரை வெளியிட்டிருக்கிறார். ரஜினியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போதுமே மாஸாக இருக்கும் ஆனால் இப்படி ஒரு போஸ்டரை ரஜினியே எதிர்பார்த்திருக்கமாட்டார் என்று கூறிவருகின்றனர். மேலும் மகளால் ரஜினிக்கு இப்படி ஒரு சோதனை வந்திருக்கக்கூடாது; படத்தில் என்னவெல்லாம் செய்து வைத்திருக்கிறாரோ என்றும் கடுமையாக ட்ரோல் செய்துவருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X