ராஷ்மிகாவை க்யூட் மேக்ஸ்னு புகழ்ந்த பிக் பாஸ் பிரபலம்.. க்ரிஞ்ச் மேக்ஸ் என கலாய்க்கும் ரசிகர்கள்!
சென்னை: தளபதி 66 படத்திற்கு பூஜை போடப்பட்டு அதன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.
இதற்காகத்தான் ராஷ்மிகாவை வேண்டாம் என சொன்னோம் என நெட்டிசன்கள் தளபதி விஜய்க்கு அருகே அவர் கொடுத்த ஓவர் ஆக்டிங் போஸ்களை பார்த்து ட்ரோல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பிக் பாஸ் பிரபலம் மற்றும் விமர்சகரான அபிஷேக் ராஜா போட்ட க்யூட் மேக்ஸ் ட்வீட்டை ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

தளபதி 66 பூஜை
பீஸ்ட் படம் வரும் ஏப்ரல் 13ம் தேதி வெளியாக உள்ள நிலையில், ஏப்ரல் 6ம் தேதியே விஜய் ரசிகர்களுக்கு அடுத்த ட்ரீட்டை நடிகர் விஜய் கொடுத்து அசத்தி விட்டார். தளபதி 66 படத்தின் பூஜை இனிதே கோலாகலமாக போடப்பட்டுள்ளது. இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா நடிக்க தமன் இசையமைக்கிறார். சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

வெட்கப்பட வைத்த ராஷ்மிகா
நடிகர் விஜய்யின் தீவிர ரசிகையான ராஷ்மிகா மந்தனா எப்படியாவது விஜய் உடன் சேர்ந்து நடிப்பேன் என தொடர்ந்து சொல்லி வந்த நிலையில், தற்போது விஜய்க்கு ஜோடியாக தளபதி 66 படத்தில் கமிட் ஆன நிலையில், பூஜா ஹெக்டே போல பூஜையை மிஸ் பண்ணாமல் கலந்து கொண்டு விஜய்க்கு கண் திருஷ்டி உடைக்கும் போஸ்களை எல்லாம் கொடுத்து அவரையே வெட்கப்பட வைத்து விட்டார்.

செம அழகு
தளபதி 66 படத்தின் பூஜை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ராஷ்மிகா மந்தனா, தனக்கு பிடித்தமான நடிகர் விஜய்யை பார்த்ததும் வேறலெவலில் ரியாக்ட் செய்த படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. ராஷ்மிகா மந்தனா அவ்வளவு அழகாகவும், குறும்புத்தனத்துடன் டாப் நடிகை என்கிற இமேஜை எல்லாம் மறந்து விட்டு ஃபேன் கேர்ள் மூமெண்ட்டாக நடந்து கொண்டதை பலரும் பாராட்டி வருகின்றனர்.

க்யூட் மேக்ஸ்
அந்த போட்டோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வரும் நிலையில், பிக் பாஸ் பிரபலம் மற்றும் விமர்சகர் அபிஷேக் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த போட்டோவை ஷேர் செய்து 'க்யூட் மேக்ஸ்.. எங்கள் சார்பாக விஜய்க்கு அப்படி செய்ததற்கு நன்றி" என பாராட்டி ட்வீட் போட்டுள்ளார். அதை பார்த்த விஜய் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

க்ரிஞ்ச் மேக்ஸ்
ஏற்கனவே ராஷ்மிகாவின் போட்டோக்களை பார்த்து சிரிப்பை அடக்க முடியாமல் இருந்த ரசிகர்கள், அபிஷேக் ராஜாவின் இந்த ட்வீட்டை பார்த்ததும், அது க்யூட் மேக்ஸ் இல்லை.. க்ரிஞ்ச் மேக்ஸ் என பங்கமாக கலாய்த்து வருகின்றனர். எல்லாம் கன்ஃபார்ம் ஆகிவிட்ட நிலையில், விஜய் ரசிகர்கள் இதுவும் கடந்து போகும் என கமெண்ட் போட்டு ராஷ்மிகாவை அடுத்த தலைவியாக ஏற்றுக் கொண்டனர்.


Click it and Unblock the Notifications











