ஏதாவது பண்ணாத்தான் கரு உருவாகும்.. மகனை பக்கத்துல வச்சிக்கிட்டு தம்பி ராமையா சொன்னதை கேட்டீங்களா?
சென்னை: நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கத்தில் இன்று வெளியான படம் தான் ராஜாகிளி. அப்பாவை ஹீரோவாக வைத்து உமாபதி இயக்கிய இந்த படத்தில் தம்பி ராமையா, சமுத்திரகனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த வாரம் சமுத்திரகனியின் திரு. மாணிக்கம் படம் வெளியான நிலையில், தற்போது ராஜாகிளி படத்திலும் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தின் ரிலீஸுக்கு முன்னதாக செலிபிரிட்டி ஷோ போட்ட நிலையில், அதன் பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது ஏகப்பட்ட கேள்விகளுக்கு தனது ஸ்டைலில் பதிலளித்துள்ளார் தம்பி ராமையா.

அப்போது அவர் பேசிய பேச்சை தற்போது பலரும் ஷேர் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர். வினோதய சித்தம் படத்தில் சிறப்பாக நடித்து அசத்திய தம்பி ராமையா ஹீரோவாக இந்த படத்திலும் தூள் கிளப்பியுள்ளார் என படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களும் குவிந்து வருகின்றன.
ரியல் தொழிலதிபர் கதையா?: பிரபல தொழிலதிபர் கொலை வழக்கு காரணமாக தான் வாழ்ந்த ராஜ வாழ்க்கையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்டு பிச்சைக்காரர் போல மாறிய வாழ்க்கையை மையப்படுத்தி இந்த படத்தை உமாபதி ராமையா இயக்கியுள்ளார். இந்த படத்தில் தம்பி ராமையா அந்த பிரபல தொழிலதிபராக நடித்துள்ளார். இது உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட கதையா என பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு, ஒவ்வொரு படமும் உண்மை சம்பவங்களில் இருந்து இன்ஸ்பயர் ஆகி சில பல கற்பனைகளை கலந்து உருவாக்கப்படும் கதை தான் என பதில் அளித்தார் தம்பி ராமையா.

கரு உருவாகணும்னா: திரைக்கதையின் கரு குறித்து பேசிக் கொண்டிருந்த தம்பி ராமையா கரு உருவாக வேண்டுமென்றால் எதாவது பண்ணாத்தானே உருவாகும். சும்மா இருந்தா எப்படி கரு உருவாகும் என டபுள் மீனிங்கில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியது பலரையும் ஷாக் ஆக்கியது. சமீபத்தில் திருமணமான மகனை பக்கத்திலேயே வைத்துக் கொண்டு தம்பி ராமையா இப்படியெல்லாம் பேசலாமா என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

அர்ஜுன் மாப்பிள்ளை: நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற தம்பி ராமையாவின் மகன் உமாபதி நடிகையும் அர்ஜுனின் மகளுமான ஐஸ்வர்யாவை காதலித்து இந்த ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். ஹீரோவாக தம்பி ராமையா மகன் நடித்த படங்கள் எல்லாம் பெரிதாக ஓடாத நிலையில், தற்போது அப்பாவை வைத்து படம் இயக்கியுள்ளார். இயக்குநராக வெற்றி பெறுவாரா என்பது இந்த வாரம் படத்தின் ரிசல்ட்டை பார்த்தாலே தெரிந்துவிடும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











