Adah Sharma: பார்.. முழுசா குட்டி கங்கனா ரனாவத்தாக மாறிய அதா சர்மாவை பார்.. பறக்கும் ட்ரோல்கள்!

மும்பை: 2018ம் ஆண்டுக்கு பிறகு பட வாய்ப்புகளே இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த அதா சர்மாவுக்கு தி கேரளா ஸ்டோரி படம் கிடைத்த நிலையில், குட்டி கங்கனா ரனாவத்தாகவே மாறிவிட்டார் என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்ற்னர்.

நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பிய தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் வரவேற்பே இல்லையென்றாலும் வடமாநிலங்களில் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

Fans trolls The Kerala Story actress Adah Sharma with mini Kangana Ranaut comments

அமீர் கானின் லால் சிங் சத்தா படத்துக்கோ, கங்கனா ரனாவத்தின் சமீபத்திய படங்களுக்கோ கிடைக்காத அளவுக்கு வரவேற்பும் அதே சமயம் எதிர்ப்பும் கிடைத்திருக்கிறது.

தி கேரளா ஸ்டோரி வசூல்: இஸ்லாமிய தீவிரவாதிகள் இந்து பெண்களை ஏமாற்றி மதமாற்றம் செய்ய வைத்து தீவிரவாதிகளாக மாற்றும் கதையை இயக்குநர் சுதிப்தோ சென் தி கேரளா ஸ்டோரி எனும் படமாக உருவாக்கினார். அதா சர்மா, சித்தி இத்னானி, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே 68 கோடி வரை வசூல் ஈட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Fans trolls The Kerala Story actress Adah Sharma with mini Kangana Ranaut comments

நாடு முழுவதும் பாஜகவினர் மற்றும் இந்து அமைப்பினர் இந்த படத்துக்கு பெரிய ஆதரவு கரம் நீட்டிய நிலையில், சுமார் 80 கோடி வரை வசூல் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தி காஷ்மீர் ஃபைல்ஸ் 340 கோடி வசூல் ஈட்டிய நிலையில், தி கேரளா ஸ்டோரிக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றே தெரிகிறது.

எனக்கு பலத்தை தருவது சிவன் தான்: இந்நிலையில், நடிகை அதா சர்மா சிவ ஆலயம் ஒன்றில் தியானம் செய்வது போல அமர்ந்துக் கொண்டு சிவனை துதிக்கும் பாடல்களை கண்களை மூடிக் கொண்டு பாடும் வீடியோ ஒன்றை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Fans trolls The Kerala Story actress Adah Sharma with mini Kangana Ranaut comments

மேலும், அதற்கு கேப்ஷனாக என்னுடைய எனர்ஜிக்கு காரணமே இவர் தான். பூங்கொத்துக்களையும் தடைகளையும் சமமாக நினைக்கும் பலத்தை நான் அடைய காரணம் சிவ பெருமான் தான் என பதிவிட்டுள்ளார்.

முழுசா கங்கனா ரனாவத்தாக மாறிட்டார்: பாலிவுட்டையே பகைத்துக் கொண்டு நடிகை கங்கனா ரனாவத் வலதுசாரி சிந்தனையுடன் வலம் வரும் நிலையில், அவரை போலவே தி கேரளா ஸ்டோரி படத்தில் நடித்த நடிகை அதா சர்மாவும் மாறிவிட்டார் என்றும் இதற்கு மேல் அவர் நடிக்கும் படங்களை ரசிகர்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள் என்றும் அதனால் முழுதாகவே பாஜகவில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் அவர் செயல்பட்டு வருகிறார் என ட்ரோல்கள் பறக்கின்றன.

Fans trolls The Kerala Story actress Adah Sharma with mini Kangana Ranaut comments

டாப்லெஸ் ஆகவும் பிகினி உடைகளை அணிந்து கொண்டு படு கவர்ச்சியாக வலம் வந்த அதா சர்மா தி கேரளா ஸ்டோரி படத்தில் நடித்த பின்னர் அப்படியே தன்னை ஹோம்லி நடிகையாக காட்டிக் கொண்டு நாடகம் ஆடி வருகிறார் என்றும் விளாசி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X