நல்லவேளை சிவாஜி செத்துட்டாரு.. ரசிகர்களை கதறவிடும் ரீல்ஸ் திவாகர்.. இதுக்கு இல்லையா சார் ஒரு End?

தஞ்சாவூர்: இணையம் வளர்ந்த பின்னர் பலரும் தங்களது திறமைகளை வெளிக்கொண்டு வர இணையத்தை மிகவும் முக்கியமான தளமாக பயன்படுத்திக் கொண்டார்கள். இதன் மூலம் பலரும் அவர்கள் நினைத்த இலக்கை அடைந்துள்ளார்கள். பிரலமாக மாறியுள்ளார்கள். இதில் பலர் பிரபலம் ஆக வேண்டும் எனும் நோக்கில் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்கள். சிலர் பணம் சம்பாதிக்கும் நோக்கில் இணையத்தை பயன்படுத்தி பணம் மற்றும் புகழ் என இரண்டையும் ஈட்டி வருகிறார்கள்.

இந்த வரிசையில் இருக்கும் ஒருவர்தான் வாட்டர்மெலன் திவாகர். அடிப்படையில் மனநல மருத்துவரான இவர், தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் ரீல்ஸ் பதிவு செய்து அதனை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் சுமார் 2.36 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் பின் தொடர்கிறார்கள். இவரது ரீல்ஸ்கள் இணையவாசிகள் மத்தியில் பிரபலமானதால், இவர் பிரபலமானார்.

குறிப்பாக அவர் பெரிய பெரிய ஸ்டார்களுக்கு பெயர் வாங்கிக் கொடுத்த அல்லது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற காட்சிகளை ரீல்ஸ் செய்து பதிவிட்டு வருகிறார். இதில் கஜினி படத்தில் சூர்யா அசினுடன் இணைந்து தர்பூசணி சாப்பிடும் காட்சியை ரீல்ஸாக பதிவிட்டு பகிர்ந்தார். அதிலிருந்து இவரை வாட்டர்மெலன் திவாகர் என பலரும் அழைக்க ஆரம்பித்துவிட்டார்கள். மேலும் இவரது வீடியோக்களை இணையவாசிகள் பலரும் ட்ரோல் செய்து வருகிறார்கள். அதே நேரத்தில் அவருக்கு ரசிகர் மன்றங்களும் இணையதளத்தில் உள்ளது.

Fans Trolss Instagram Fame Watermelon Divakar Reels Infront Of Sivaji Statue Goes Trending

வாட்டர்மெலன் திவாகர்: திவாகரைப் பொறுத்தவரையில் அவரது வீடியோக்களுக்கு வரும் கமெண்ட்களை பார்த்து, அதற்கு ஏற்றவாறு தனது வீடியோக்களை மேம்படுத்தி வருகிறார். மேலும் அவருக்கு இந்த அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் இருந்தாலும், இதுவரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம், மக்கள் பயன்படுத்தும் எந்த பொருளுக்கும் விளம்பரம் செய்தது கிடையாது. வரும் காலங்களிலும் விளம்பரம் செய்ய மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனி வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ட்ரோல்: பலரும் இவரை பேட்டி எடுக்கிறேன் என அழைத்து அவர்களின் பேட்டியில் இவரை ட்ரோல் மெட்டீரியலாக பயன்படுத்தி உள்ளார்கள். இது தொடர்பாக பல வீடியோக்கள் இணையத்தில் இப்போதும் உலா வருகிறது. இவரது வீடியோக்களுக்கு மோசமான கமெண்ட் செய்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இயக்குநர் மிஷ்கின் சில வாரங்களுக்கு முன்னர் மேடையில் ஆபாச வார்த்தைகள் பயன்படுத்தி பேசியதற்கு, கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார் திவாகர்.

சிவாஜி: இப்படியான நிலையில் திவாகர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் சமீபத்தில் எடுத்த ரீல்ஸ் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதாவது தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் சிவாஜி சிலைக்கு முன் தான் எடுத்த ரீல்ஸை பகிர்ந்துள்ளார். அதில் படையப்பா பட வசனத்தையும் கர்ணன் படக் காட்சியையும் இணைத்து நடித்துள்ளார் திவாகர். இவரது இந்த வீடியோவைப் பார்த்த இணைய வாசி ஒருவர், நல்லவேளை சிவாஜி செத்துட்டாரு என கேப்ஷன் இட்டுள்ளார். இதனைப் பார்த்த மற்றொரு இணைய வாசி, இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு என பதிவிட்டுள்ளார். பலரும் இவரது வீடியோவுக்கு பாசிட்டிவாகவும் நெகட்டிவாகவும் கமெண்ட்களை தெரிவித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X