ஏன், எங்க தளபதி படத்திற்கு மட்டும் எப்ப பார்த்தாலும் பிரச்சனையா இருக்கு?: ரசிகர்கள் கவலை #Mersal

By Siva

சென்னை: விஜய் படத்திற்கு மட்டும் எப்பொழுது பார்த்தாலும் கடைசி நேரத்தில் பிரச்சனை வருகிறது என்று கூறி அவரின் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இந்த தீபாவளி மெர்சல் தீபாவளி என்று மகிழ்ச்சியாக உள்ளனர் விஜய் ரசிகர்கள். விஜய்யை வித்தியாசமான 3 கெட்டப்புகளில் பார்க்க ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் படம் ரிலீஸாவதில் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

பல தியேட்டர்களில் டிக்கெட் முன்பதிவு நடக்காததால் ரசிகர்கள் கவலையிலும், கோபத்திலும் உள்ளனர்.

மெர்சல்

எப்ப பார்த்தாலும் தளபதி படத்திற்கு ஏன் பிரச்சனை வருகிறது. இன்னும் 2 நாட்கள் தான் உள்ளது... மேசமானது தமிழகத்தில் மட்டுமே நடக்கிறது என்று ஒரு ரசிகர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ரிலீஸ்

மெர்சல் ரிலீஸ் பற்றி நல்ல செய்திக்காக காத்திருக்கிறோம்..எந்த காட்சியையும் நீக்கக்கூடாது என்று எதிர்பார்க்கிறோம். தளபதி, தேனாண்டாள் மீது நம்பிக்கை உள்ளது.

பிரச்சனை

ஹைதராபாத்தில் தமிழில் மெர்சல் படத்திற்கான டிக்கெட்டை புக் செய்ய முடியவில்லை. வேறு யாருக்காவது இந்த பிரச்சனை உள்ளதா?#Mersal #Hyderabad #MersalDiwali

தூக்கம்

ஹேமாருக்மணி மேடம் மெர்சல் சென்சார் சான்று குறித்து உங்களின் ட்வீட்டுக்காக காத்திருக்கிறோம்...நைட்டு ஃபுல்லா தூக்கமே வரல

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X