தனுஷ் பிறந்தநாள்.. வாழ்த்து சொன்னாரா ஐஸ்வர்யா? ..ரசிகர்கள் எதிர்பார்ப்பு
சென்னை : இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷுடன் தனது விவாகரத்து அறிவிப்பை கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிப்படுத்தினார்.
இருவரும் நண்பர்களாக மனமொத்து பிரிவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.
அவர்கள் கூறியதைப்போலவே, ஒருவர் கேரியர் மாற்றங்களில் மற்றவர், வாழ்த்து சொல்வதை வழக்கமாக்கினர்.

இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினி
இயக்குநரும் நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகளுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், நடிகர் தனுஷை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை 18 ஆண்டுகள் நீடித்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு இருவரும் மனமொத்து பிரிவதாக அறிவித்தனர். அவர்களின் இந்த முடிவு ரசிகர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கேரியரில் பிசி
இதையடுத்து இருவரும் தங்களது கேரியரில் பிசியாக இருந்து வருகின்றனர். இந்த பிரிவிற்கு பிறகு முஸாஃபிர் என்ற இசை ஆல்பத்தை ஐஸ்வர்யா ரஜினி வெளியிட்டார். அந்த ஆல்பத்திற்கு தனது வாழ்த்தை பிரெண்ட் ஐஸ்வர்யா என்று குறிப்பிட்டு தெரிவித்திருந்தார் தனுஷ். இதையடுத்து தனுஷிற்கு தனது நன்றியை ஐஸ்வர்யா தெரிவித்திருந்தார்.

இசை ஆல்பத்திற்கு தனுஷ் வாழ்த்து
தொடர்ந்து தனுஷ் படத்தின் ரிலீசுக்கு மற்றும் அதன் வெற்றிக்கும் ஐஸ்வர்யா வாழ்த்து தெரிவித்திருந்தார். இவர்களது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா, இருவரிடமும் மாறி மாறி இருந்து வருகின்றனர். இந்நிலையில் இன்றைய தினம் தன்னுடைய 39வது பிறந்தநாளை நடிகர் தனுஷ் கொண்டாடி வருகிறார்.

வாழ்த்து சொல்லாத ஐஸ்வர்யா ரஜினி
அவருக்கு இன்றைய தினம் ஐஸ்வர்யா ரஜினி, வாழ்த்துக்களை தெரிவிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் இதுவரை வாழ்த்து குறித்து இதுவரை ஐஸ்வர்யா ரஜினி, மூச்சுக்கூட விடவில்லை. இதனால் தனுஷ் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

தோழி என்று சொல்லிய தனுஷ்
நடிகர் தனுஷ், ஐஸ்வர்யாவை தோழி என்று கூறிய நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஐஸ்வர்யா தனுஷ் என்று இருந்த பெயரை ஐஸ்வர்யா ரஜினி என்று மாற்றினார் ஐஸ்வர்யா. இந்நிலையில், ஒரு தோழியாகவாவது ஐஸ்வர்யா ரஜினி தனுஷிற்கு வாழ்த்து தெரிவிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
தனுஷின் 39வது பிறந்தநாளையொட்டி அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. ஆனால் ஐஸ்வர்யா வாழ்த்து சொல்லாததே அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இருவரும் விரைவில் இணைந்துவிடுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











