Don't Miss!
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
காதலிச்சா, இந்த கருமத்தை எல்லாம் இன்ஸ்டாவில் போடுவதா?: பிக் பாஸ் பிரபலத்திற்கு திட்டு
பெங்களூர்: காதலித்தால் இப்படிப்பட்ட மோசமான புகைப்படங்களை எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியிடுவதா என்று நடிகை சம்யுக்தாவை ரசிகர்கள் திட்டியுள்ளனர்.
கன்னட நடிகையான சம்யுக்தா ஹெக்டே ஜெயம் ரவியின் கோமாளி படத்தில் நடிக்கிறார். முன்னதாக அவர் கன்னட பிக் பாஸ், ரோடீஸ் எஸ்14, ஸ்ப்லிட்ஸ்வில்லா 11 ஆகிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் அவர் வாழ்வில் காதல் ஏற்பட்டுள்ளது.
சம்யுக்தா ஹெக்டே
சம்யுக்தா ஹெக்டே ஜெர்மனியை சேர்ந்த கிறிஸ் சாவ்ர் என்பவரை காதலிக்கிறார். சம்யுக்தா கிறிஸுடன் சேர்ந்து எடுக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு தன் காதலை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் கிறிஸுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட அதை பார்த்து ஆளாளுக்கு அவரை வறுத்தெடுத்துள்ளனர்.
விமர்சனம்
காதலிப்பது என்றால் காதலருடன் சேர்ந்து எடுக்கும் நெருக்கமான புகைப்படங்களை எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டும் என்று இல்லை. இப்படி கண்ட கருமத்தை எல்லாம் சமூக வலைதளங்களில் வெளியிட வேண்டாம். உங்களுக்கு வெட்கமாக இல்லை என்றாலும் பார்க்க எங்களுக்கு அசிங்கமாக உள்ளது என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
வீடியோ
சம்யுக்தாவை விளாசுபவர்கள் விளாசினாலும் சிலர் அவரிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள். என்ன சம்யுக்தா, வெறும் புகைப்படம் தானா?, வீடியோ எல்லாம் கிடையாதா?. உங்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறோம். ஏமாற்றிவிடாதீர்கள் என்று கேவலமாக கமெண்ட் போட்டுள்ளனர். சம்யுக்தா தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட நிலையில் தற்போது இப்படி ஒரு புகைப்படத்தை போஸ்ட் செய்துள்ளார்.
புதுக் காதல்
முன்னதாக சம்யுக்தா ரோடீஸ் நிகழ்ச்சி புகழ் பஷீர் அலியை காதலித்தார். அதன் பிறகு ஸ்ப்லிட்ஸ்வில்லா நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது சிம்பா மற்றும் ஷகுன் பாண்டேவுடன் சேர்ந்து சம்யுக்தாவின் பெயர் அடிபட்டது. சிம்பா சம்யுக்தா மீது பைத்தியமாக இருந்தார். ஆனால் அவர்களின் காதலுக்கு ஆயுள் இல்லாமல் போய்விட்டது. இந்நிலையில் சம்யுக்தா வெளிநாட்டவரை காதலிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அண்மை காலமாக சம்யுக்தா அவரின் படங்களுக்கு பதிலாக தனிப்பட்ட வாழ்க்கைக்காக தான் அதிகம் பேசப்படுகிறார்.