Cobra Memes: படம் எடுக்காமல் பம்மிய கோப்ரா.. சும்மா வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

சென்னை: சியான் விக்ரம் நடிப்பில் அடுத்த இண்டஸ்ட்ரி ஹிட் லோடிங் என விஜய் ரசிகர்களும் சேர்ந்து சப்போர்ட் செய்து வந்த நிலையில், மண்டையை காய வைத்து விட்டது கோப்ரா திரைப்படம்.

ஆரம்பத்தில் சூர்யா, அஜித் ரசிகர்கள் மட்டுமே ட்ரோல் செய்து வந்த நிலையில், விஜய் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் கோப்ராவை வச்சு செய்ய ஆரம்பித்து விட்டனர்.

சோஷியல் மீடியாவில் கோப்ரா படம் பற்றிய நெகட்டிவ் விமர்சனங்களுடன் சேர்த்து பறக்கும் மீம்களை இங்கே பார்ப்போம்..

பம்மிய கோப்ரா

பம்மிய கோப்ரா

படம் எடுத்து பாயாமல் சியான் விக்ரமின் கோப்ரா பம்மி விட்டது என காமெடி மீம்களை நெட்டிசன்கள் போட்டு பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர். அஜய் ஞானமுத்து படத்தை பெரிதும் சொதப்பி விட்டார் என்றும் கிளைமேக்ஸ் காட்சிகளை முடிக்கத் தெரியாமல் முடித்து விட்டதாக நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

ஆம்ப்பா அதே அந்நியன் தான்ப்பா

ஆம்ப்பா அதே அந்நியன் தான்ப்பா

சியான் விக்ரமின் கோப்ரா படம் புதிதாக இல்லை என்றும் பழைய எம்ஜிஆர் காலத்து கதை என்றும் அந்நியன் படத்தின் கிளைமேக்ஸில் வரும் காட்சிகளையே இயக்குநர் அஜய் ஞானமுத்து ஃபேன் பாய் முமெண்ட் என்கிற பெயரில் காப்பி அடித்து வைத்து விட்டார் என டான் படத்தின் சிவகார்த்திகேயன் - சூரியின் ஆம்ப்பா காமெடியை போட்டு கழுவி ஊற்றி வருகின்றனர்.

பாம்புகள் கொண்டாடும் வெற்றி

பாம்புகள் கொண்டாடும் வெற்றி

கோப்ரா எப்படி ப்ரோ இருக்கு? என ரசிகர் ஒருவர் கேள்வி கேட்க, அதற்கு மற்றொருவர் பாம்புகள் கொண்டாடும் வெற்றி என வச்சு செய்து வருகின்றனர். இந்த வருடம் விஜய், அஜித், சூர்யா மட்டுமில்ல விக்ரமும் சொதப்பல் படத்தை கொடுத்துவிட்டார் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

ராஜபாட்டை, தூம் 3

ராஜபாட்டை, தூம் 3

தசாவதாரம் பிகின்ஸ்னு போடலாம்னு பார்த்தால் பழையபடியே ராஜபாட்டை, தூம்2, தூம் 3ஐ சேர்த்து எடுத்து வச்சிருக்கானுங்க என கோப்ரா படத்தை பங்கமாக கலாய்த்து தள்ளி வருகின்றனர். சியான் விக்ரமின் ஒட்டுமொத்த உழைப்பும் வீணாகி விட்டது என ட்வீட்கள் பறக்கின்றன.

விக்ரம் நடிப்பு

விக்ரம் நடிப்பு

நீங்க நடிக்கிற படம் நல்லா இருக்கோ இல்லையோ.. ஆனால், உங்க நடிப்பை மட்டும் குறை சொல்லாத அளவுக்கு நல்லா பண்ணிடுறீங்க என சியான் விக்ரமின் நடிப்பு மட்டுமே படத்திற்கு பலமாக இருந்தாலும் திரைக்கதை பெரிதும் சொதப்பி விட்டதை சொல்லி வருகின்றனர்.

இன்னொரு நெல்சன் ரெடி

இன்னொரு நெல்சன் ரெடி

இளம் இயக்குநர்கள் பெரிய நடிகர்களின் படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தாலே ஏன் திணறுகின்றனர் என்கிற கேள்வியையும் பலரும் எழுப்பி வருகின்றனர். எச். வினோத், நெல்சன் வரிசையில் அஜய் ஞானமுத்துவும் இணைந்து விட்டார். அடுத்த படமாவது பார்த்து பண்ணுங்க பாஸ் என ரசிகர்கள் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X