அஜித் சொல்லியும் கேட்காமல் அலப்பறையை கிளப்பும் ரசிகர்கள்.. டிரம்ஸ் சத்தத்துடன் கோஷம்.. ரொம்ப மோசம்!

சென்னை: நடிகர் அஜித் குமார் அட்வைஸ் சொன்னவுடனே பல ரசிகர்கள் சாரி அஜித் இனிமேல் அப்படி கத்த மாட்டோம் என கமெண்ட் போட்டு மன்னிப்புக் கேட்டு வருகின்றனர். ஆனால், அதிலும் சில ரசிகர்கள் எங்களோட செலிபரேஷனே இதுமட்டும் தான் இதையும் தடுத்தா எப்படி என திருப்பி அஜித்தை பார்த்தே கேள்வி எழுப்ப ஆரம்பித்துவிட்டனர்.

கடந்த ஆண்டு பொங்கலுக்கு அஜித் நடித்த துணிவு படம் கடைசியாக வெளியானது. ஆனால், அந்த படமும் பாக்ஸ் ஆபிஸில் 200 கோடி அளவுக்கு மட்டுமே வசூல் செய்தது. அதே ஆண்டு வெளியான விஜய்யின் வாரிசு திரைப்படம் 300 கோடி வசூலும் லியோ திரைப்படம் 600 கோடி வசூலும் ஈட்டியது.

ajith kumar vidamuyarchi hero

இந்த ஆண்டு வெளியான விஜய்யின் கோட் திரைப்படம் கோலிவுட்டின் இண்டஸ்ட்ரி ஹிட்டாக இந்த ஆண்டு மாறியிருப்பதாக தியேட்டர் ஓனர்கள் ஒட்டுமொத்தமாக ஒருமித்த கருத்தை தெரிவித்துள்ளனர்.

விடாமுயற்சி ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்: அஜர்பைஜானில் தனது மனைவியை தேடி அஜித் குமார் அலையும் படமாக விடாமுயற்சி உருவாகியுள்ளது. அந்த படம் ஹாலிவுட் படமான பிரேக்டவுன் படத்தின் காப்பி என்றும் உரிய அனுமதியை பணம் கொடுத்து படக்குழு பெறவில்லை என்றும் லைகாவுக்கு மிகப்பெரிய சிக்கல் என்றெல்லாம் பஞ்சாயத்து ஓடிக் கொண்டிருந்தாலும், அதெல்லாம் சரியாகி விடும் என்றும் அனிருத் இசையில் விரைவில் விடாமுயற்சி ஃபர்ஸ்ட் சிங்கிள் இந்த வாரம் வெளியாகப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ajith kumar vidamuyarchi hero

அஜித் அட்வைஸ்: 'தல' என அழைக்க வேண்டாம் என்றும் தனக்கு எந்தவொரு அடைமொழியும் வேண்டாம் என ஏற்கனவே அஜித் குமார் அறிவித்த நிலையில், சமீப காலமாக "கடவுளே அஜித்தே"ன்னு ரசிகர்கள் கோஷம் போட்டு வருவது தன்னை ரொம்பவே கஷ்டப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ள அஜித் அதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

ajith kumar vidamuyarchi hero

இதுதான் எங்க செலிபரேஷனே: இந்த ஆண்டு அஜித் நடிப்பில் ஒரு படம் கூட வெளியாகவில்லை. இப்படி கோஷம் போட்டாவது எங்களுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறோம். அதுகூட உங்களுக்கு பிடிக்கவில்லையா அஜித் குமார் என சில அஜித் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

கடவுளே தானே வேண்டாம் ஓகே ஏகே: "கடவுளே"ன்னு தானே சொல்ல வேண்டாம். அஜித்தேன்னு சொல்லலாமே என சில ரசிகர்கள் டிரம்ஸ் சத்தத்துடன் ரசிகர்கள் அஜித்தேன்னு கத்தும் வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர். மற்றவர்களுக்கு இடையூறு விளைவிக்காமல் இருக்க வேண்டும் என்பது தான் அஜித் சொல்ல வந்த முக்கிய கருத்து என்றும் அதை கூட அஜித் ரசிகர்கள் புரிந்துக் கொள்ள மறுக்கிறார்களே என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X