AI Technology: எம்ஜிஆரையும் விட்டு வைக்காத AI.. டேய் என்னடா செஞ்சி வச்சிருக்கீங்க!

சென்னை: மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப உலகமே தற்போது தன்னுடைய பாதைகளை வகுத்து வருகிறது. தற்போது ஆர்ட்டிபீஷியல் இன்டலிஜன்ஸ் என்ற AI தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. கணினி தொழில்நுட்பத்தின் கொடையான இந்த செயற்கை நுண்ணறிவு அடுத்தடுத்த பரிணாமங்களை நோக்கிய தன்னடைய பயணத்தை முன்னெடுத்து வருகிறது. இதன்மூலம் பல்வேறு துறையினரும் பல சாத்தியமற்ற விஷயங்களை செய்து வருகின்றனர். மிகப்பெரிய நம்பிக்கையை இந்த தொழில்நுட்பம் கொடுத்து வருகிறது. குறிப்பாக திரைத்துறை சார்ந்த பல கற்பனைகளுக்கு வடிகாலாக இந்த தொழில்நுட்பம் செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் மறைந்த பல நடிகர்கள், பின்னணி பாடகர்கள் உள்ளிட்ட பலரையும் மீட்டு கொண்டுவரும் செயலை இந்த AI தொழில்நுட்பம் மூலம் சாத்தியப்படுத்த முடிகிறது. சமீபத்தில் வெளியான லால் சலாம் படத்திற்கு இசையமைத்திருந்த இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் மறைந்த பாடகர்கள் சாகுல் ஹமீது, பம்பா பாக்யா ஆகியோரின் குரல்களில் பாடல் பதிவினை செய்திருந்தார். இது திரையுலகில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இதுபோன்ற பல முயற்சிகளை வருங்காலங்களில் ரசிகர்கள் பார்க்க முடியும் என்பதும் தற்போது எதிர்பார்ப்பில் உள்ளது.

Fans used Artificial intelligence technology and make video of former TN CM MGR

ஏஐ தொழில்நுட்பம்: கணினி தொழில்நுட்பத்தின் கொடையாக செயற்கை நுண்ணறிவு பார்க்கப்படுகிறது. ஆர்ட்டிபீஷியல் இன்டலிஜன்ஸ் என்ற AI தொழில்நுட்பத்தில் அடுத்தடுத்த பரிணாமங்களை நோக்கிய பயணங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கற்பனைக்கு முக்கியத்துவம் தரப்படும் திரைத்துறையில் மட்டுமில்லாமல் பல்வேறு துறைகளிலும் மிகப்பெரிய அளவில் சாதனை முயற்சிகளை AI தொழில்நுட்பத்தின் முலம் பல்வேறு தரப்பினரும் சாத்தியப்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் வெளியான லால் சலாம் படத்தில் ஹாகுல் ஹமீது, பம்பா பாக்யா போன்றவர்களின் குரல்களை இந்த தொழில்நுட்பம் மூலம் மீண்டும் ரசிகர்களுக்கு பரிசாக்கியுள்ளார் ஏஆர் ரஹ்மான்.

ஏஐ தொழில்நுட்பத்தில் எம்ஜிஆர்: தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படங்களில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமூக வலைதளங்களிலும் பல்வேறு ரசனைக்குரிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவர் எம்ஜிஆரையும் தங்களுக்கு விருப்பமான வகையில் பார்த்துக் கொள்ள அவரது ரசிகர்கள் இந்த தொழில்நுட்பத்தை மேற்கொண்டு வருகின்றனர். காதல் காட்சிகளில் அதிகமாக நடித்திருந்தாலும் அதிலும் ஆக்ஷனுக்கான செயல்பாட்டையே கொடுத்திருப்பார் எம்ஜிஆர்.

எம்ஜிஆர் வீடியோ: அவரை அழகான அமைதியான காதலராக பார்க்க நினைத்த ரசிகரின் கைவண்ணத்தில் தற்போது AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தற்காலத்திய இளைஞராக கண்ணுக்கொரு வண்ணக்கிளி என்று பாடல் பாடியபடி ஏக்கத்தில் இந்த வீடியோவில் எம்ஜிஆர் காணப்படுகிறார். ஆனால் மறக்காமல் அவரை கருப்பு வெள்ளையில் காட்சிப்படுத்தியுள்ளனர். தனக்கேயுரிய அழகு குறையாமல் இந்த வீடியோ மூலம் எம்ஜிஆர் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதுவும் அழகாகத்தான் இருக்கிறது என்று எண்ணும்படியாக இந்த வீடியோ காணப்படுகிறது.

சிறப்பான வீடியோ: சிறிதும் கோளாறு இல்லாமல் இயல்பாக இந்த வீடியோவை உருவாக்கியுள்ளனர். சமூக வலைதளங்களில் வெளியாகி இந்த வீடியோ எம்ஜிஆர் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. கலரில் இந்த வீடியோ அமைந்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்குமோ என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். ஆனாலும் எம்ஜிஆர் போலவே இருக்கும் ரசிகர் ஒருவரின் வீடியோ என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். எது எப்படியோ எம்ஜிஆர் ரசிகர்களை கவரும் வகையில் இந்த வீடியோ தற்போது மாஸ் காட்டி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X