Actor Dhanush: ராயன் இசை வெளியீட்டில் தனுஷ் மாஸ் என்ட்ரி.. வைப் செய்த ரசிகர்கள்!

சென்னை: நடிகர் தனுஷ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள ராயன் படம் வரும் 26ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் பட குழுவினர் ஈடுபட்டு வரும் நிலையில் இன்றைய தினம் சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக படத்தின் இசை நிகழ்ச்சி நடந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், அபர்ணா முரளி, எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று சிறப்பித்தனர். இந்நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வந்த தனுஷிற்கு ரசிகர்கள் மிகப்பெரிய அளவில் உற்சாக வரவேற்பு கொடுத்ததையும் பார்க்க முடிந்தது.

Dhanush Sun pictures Raayan

நடிகர் தனுஷ்: நடிகர் தனுஷ் நீண்ட காலங்களுக்கு பிறகு இயக்கத்தை கையில் எடுத்துள்ளார். அவரது இயக்கம் மற்றும் நடிப்பில் ராயன் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் தனுஷுடன் சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், துஷாரா விஜயன், அபர்ணா முரளி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். ஏஆர் ரஹ்மான் இசையில் இந்த படத்தின் அடுத்தடுத்த மூன்று பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. தனுஷின் எழுச்சி பாடல்களாகவே இரண்டு பாடல்கள் வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை மிக பெரிய அளவில் தூண்டியுள்ளது.

இசை வெளியீடு: வடசென்னையை மையமாகக் கொண்டு கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள ராயன் படத்தில் குடும்ப செண்டிமெண்டையும் மிக்ஸ் செய்து தனுஷ் படத்தின் கதைக்களத்தை உருவாக்கியுள்ளார். இந்தப்படம் வரும் 26ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களை படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். முதல் கட்டமாக படத்தின் 3 பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில் இன்றைய தினம் படத்தின் இசை வெளியீடு சென்னையில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது. தனுஷின் 50வது படமாக உருவாகியுள்ள ராயன் படத்தின் இந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் அதிகமான சுவாரஸ்யங்கள் காணப்பட்டன.

49 படங்களின் போஸ்டர்கள்: தனுஷின் 50வது படம் ராயன். இதை குறிக்கும் வகையில் நிகழ்ச்சியின் நுழைவுவாயிலிலேயே அவரது முந்தைய 49 படங்களின் போஸ்டர்கள் அடுத்தடுத்து ஒட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான லுக்கில் தனுஷ் காணப்பட்ட நிலையில் ரசிகர்களை இந்த போஸ்டர்கள் வெகுவாக கவர்ந்தன. இதையடுத்து தனுஷ் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வழக்கம் போல வேட்டி சட்டையில் வந்திருந்தார். அவரை ரசிகர்கள் மிகவும் உற்சாகமாக வரவேற்றத்தை பார்க்க முடிந்தது. அவரது வருகையையொட்டி அவர்கள் ஆறுவாரமாக கையசைத்தும் மொபைல் போன்களில் விளக்குகளை எரிய விட்டும் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

குறையாத உற்சாகம்: நிகழ்ச்சி துவங்கிய பின்பும் தொடர்ந்து ரசிகர்களின் உற்சாகம் குறையாமல் இருந்தது. இதனிடையே தனுஷின் வருகையையொட்டி ரசிகர்கள் 111 டெசிபலில் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தியதையும் தங்களது ஸ்மார்ட் வாட்ச் மூலம் ரசிகர்கள் வீடியோக்களாக சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இதனிடையே படத்தில் நடித்துள்ள பிரகாஷ்ராஜ் வந்தபோது நடிகர் தனுஷ் மரியாதையுடன் எழுந்து அவரை வணங்கியதை பார்த்து ரசிகர்கள் மேலும் உற்சாகமடைந்தனர். படத்தின் பாடல்களுக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து இசை நிகழ்ச்சி நடத்தியதையும் பார்க்க முடிந்தது.

ரசிகர்கள் ஆரவாரம்: தனுஷை போலவே நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், சந்தீப் கிஷன் மற்றும் காளிதாஸ் போன்றவர்களுக்கும் ரசிகர்கள் மிகப்பெரிய ஆரவாரத்துடன் வரவேற்பு கொடுத்தனர். நிகழ்ச்சியில் அபர்ணா முரளி மிக அழகான புடவையில் பங்கேற்றது ரசிகர்களை சிறப்பாக கவர்ந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X