நடிகர் கார்த்தியுடன் சுல்தான் FDFS பார்க்க ஒரு அரிய வாய்ப்பு... திரண்ட ரசிகர்கள் கூட்டம்!
சென்னை : கார்த்தியின் நடிப்பில் உருவாகியுள்ள சுல்தான் படம் வரும் ஏப்ரல் 2ம் தேதி வெளியாக உள்ளது.
இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் ரெமோ படத்தை தொடர்ந்து இப்படத்தை இயக்கி இருப்பதால் பெரும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.
இந்தப் படத்தின் டிக்கெட்டுகள் எற்கனவே விற்றுத் தீர்ந்து வர இப்பொழுது FDFS காட்சியை கார்த்தியுடன் இணைந்து பார்க்க ரசிகர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை அறிவித்துள்ளது படக்குழு.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்
தரமான திரைப்படங்களை தொடர்ந்து ரசிகர்களுக்காக தயாரித்து வழங்கிவரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் இது வரை தயாரித்த திரைப்படங்களிலேயே அதிக பொருட்செலவில் சுல்தான் திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ளார். ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்து தமிழில் முதன்முறையாக அறிமுகம் ஆகிறார்.

கர்ணன் படத்திலும்
சண்டைக்கோழி உள்ளிட்ட பல படங்களில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களிடையே தனி பாராட்டுகளைப் பெற்ற நடிகர் லால் இதில் முக்கியமான வேடத்தில் நடித்திருக்க அவருடன் ஆறடி நாயகன் நெப்போலியனும் இணைந்து நடித்துள்ளனர் . மேலும் நடிகர் லால் கர்ணன் படத்திலும் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல்வேறு நாடுகளிலும் ரிலீஸ்
கடந்த பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட சுல்தான் தேவையான திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல்கள் ஏற்பட்ட காரணத்தினால் தொடர்ந்து ரிலீஸ் தேதி தள்ளிப் போய்க்கொண்டே இருக்க இப்பொழுது வரும் ஏப்ரல் 2ஆம் தேதி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளிலும் ரிலீஸ் செய்யப்படுகிறது. தெலுங்கிலும் ஒருசேர டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது.

பாடி க்ரீன்சினிமாஸ்
இந்தப் படத்தை காண ரசிகர்கள் ஏற்கனவே தடபுடலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வரும் நிலையில் FDFS நடிகர் கார்த்தியுடன் இணைந்து பார்க்கும் வாய்ப்பை ரசிகர்களுக்கு அறிவித்துள்ளது படக்குழு. அதன்படி ஏப்ரல் 2ஆம் தேதி பாடி க்ரீன்சினிமாஸ் தியேட்டரில் FDFS காண கார்த்தி உட்பட படக்குழு பலரும் வர உள்ளனர். இந்த அறிவிப்பை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அறிவித்திருக்க ரசிகர்கள் முண்டியடித்து பாடி க்ரீன்சினிமாஸ் தியேட்டரில் டிக்கெட்டுகளை மளமளவென புக் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications