அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல்... டபுள் ட்ரீட்டுக்கு காத்திருக்கும் ரசிகர்கள்

சென்னை : நடிகர் அஜித் பிறந்தநாள் நாளை மறுதினம் கொண்டாடப்படவுள்ள நிலையில், அஜித் ரசிகர்கள் அதற்கென காத்திருக்கின்றனர். அவர் தற்போது ஹெச் வினோத் இயக்கத்தில் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள நிலையில், அவரது அடுத்தடுத்த படங்களின் அப்டேட்டிற்காக அவர்கள் வெயிட் செய்து வருகின்றனர்.

நடிகர் அஜித்

நடிகர் அஜித்

நடிகர் அஜித் முன்னணி மற்றும் முக்கிய நடிகராக கோலிவுட்டில் இருந்து வருகிறார். அவரது கேரக்டர்கள் சமீப காலங்களில் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும்வகையில் காணப்படுகின்றன. அவரது நேர்கொண்ட பார்வை படம் பெண்களின் உரிமை குறித்த கண்ணோட்டத்தை ஏற்படுத்தின.

சமூக அக்கறை

சமூக அக்கறை

இதையடுத்து வெளியான வலிமை படமும் தவறான பாதைக்கு செல்லும் இளைஞர்களின் வாழ்க்கை, அதற்கான காரணம் ஆகியவற்றை பற்றி பேசியது. இந்நிலையில் தற்போது மூன்றாவது முறையாக ஹெச் வினோத் இயக்கத்தில் இணைந்துள்ளார் அஜித். போனி கபூரே இந்தப் படத்தை 3வது முறையாக தயாரித்து வருகிறார்.

மாறுபட்ட முடிவு

மாறுபட்ட முடிவு

தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் ஒரு கருத்தை முக்கியமாக வைத்து வரும் அஜித்தின் இந்தப் படத்தில் எந்தமாதிரியாக சமூக கருத்துக்கள் இருக்கும் என்பது குறித்து ரசிகர்கள் இப்போதே யோசித்து வருகின்றனர். இதனிடையே எப்போதும் இல்லாத முடிவாக தற்போது மாறுபட்ட முடிவை எடுத்துள்ளார் அஜித்.

அடுத்தடுத்த பட அறிவிப்பு

அடுத்தடுத்த பட அறிவிப்பு

ஒரு நேரத்தில் ஒரு படத்தில் மட்டுமே கமிட்டாகும் தனது முடிவை மாற்றிக் கொண்டு தற்போது அடுத்தடுத்த படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறார். தற்போது வலிமை படத்தை தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே, அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே62 குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஏகே61 டைட்டில் அறிவிப்பு?

ஏகே61 டைட்டில் அறிவிப்பு?

மேலும் அஜித்தின் 63வது படம் குறித்த தகவலும் தற்போது வெளியாகியுள்ளது. 63வது படத்தை சிறுத்தை சிவா இயக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் வரும் மே 1ம் தேதி தனது பிறந்தநாளையொட்டி தற்போது நடித்துவரும் 61வது படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.

ஏகே63 அறிவிப்பு?

ஏகே63 அறிவிப்பு?

இதனிடையே ஏகே63 படம் குறித்த அறிவிப்பும் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் குறித்த அப்டேட்டும் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அஜித் ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்துள்ளனர். நாளை மறுநாள் அஜித் பிறந்தநாளுக்காக காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X