இன்னும் சில தினங்களில் ஷாருக்கான் பிறந்தநாள்.. ஜவான் அப்டேட் வெளியாகுமா!

மும்பை : நடிகர் ஷாருக்கானின் பிறந்தநாள் வரும் நவம்பர் 2ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

பாலிவுட் பாட்ஷா என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ஷாருக்கின் இந்தப் பிறந்தநாளுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நாளில் அவரது பதான் படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல ஜவான் படத்தின் அப்டேட் வெளியாகுமா என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

பாலிவுட் ஹீரோ ஷாருக்கான்

பாலிவுட் ஹீரோ ஷாருக்கான்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பல ஆண்டுகளாக நடித்து ரசிகர்களின் பாலிவுட் பாட்ஷாவாக இருந்து வருகிறார். இவர் முதலில் தொலைக்காட்சிகளில் நடிக்கத் துவங்கி பின்பு அதன்மூலம் திரையில் கால் பதித்தவர். இவரது ஆரம்ப கால படங்கள் அனைத்தும் இவருக்கு சிறப்பாக அமைந்தன.

சிறப்பான கேரியர்

சிறப்பான கேரியர்

தொடர்ந்து ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து அதற்கேற்ப கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவருக்கு பாலிவுட்டில் மட்டுமில்லாமல் இந்திய அளவில் எராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். இவரது துறுதுறுப்பான நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.

மகனால் மனஉளைச்சல்

மகனால் மனஉளைச்சல்

சமீபத்தில் தன்னுடைய மகனின் சிறைவாசத்தால் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருந்தார் ஷாருக்கான். இதனால் படங்களில் நடிப்பதில் இருந்து விலகியிருந்தார். இதனால்தான் அட்லீ இயக்கத்தில் இவர் நடித்துவரும் படத்தின் சூட்டிங்கும் தள்ளிப் போனது. இதனிடையே தற்போது ஜவான் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

ஜவான் பட சூட்டிங்

ஜவான் பட சூட்டிங்

ஜவான் படத்தின் சூட்டிங் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நிலையில், விஜய்யை நேரில் சந்தித்து பேசினார் ஷாருக்கான். இந்நிலையில் வரும் நவம்பர் 2ம் தேதி இவரது பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ளது. இதன் கொண்டாட்டங்களுக்காக அவரது ரசிகர்கள் தற்போதே தயாராகி வருகின்றனர்.

ஜவான் அப்டேட்?

ஜவான் அப்டேட்?

இதனிடையே அன்றைய தினம் அவரது பதான் படத்தின் டீசர் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் வரும் ஜனவரி 25ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தியில் ரிலீசாகவுள்ளது. இதனிடையே ஷாருக் -அட்லீ காம்பினேஷனில் உருவாகியுள்ள ஜவான் படத்தின் அப்டேட் அன்றைய தினம் வெளியாகுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

வெற்றியடைவாரா அட்லீ?

வெற்றியடைவாரா அட்லீ?

வரும் ஜனவரியில் ஷாருக்கின் பதான் படம் ரிலீசாகவுள்ள நிலையில், கோடைக் கொண்டாட்டமாக ஜவான் படம் ரிலீசாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. விஜய்யின் அடுத்தடுத்த 3 படங்களை ஹாட்ரிக் வெற்றியாக்கிய அட்லீ, பாலிவுட்டில் இந்தப் படம் மூலம் கால் பதித்துள்ளார். இந்தப் படம் அவருக்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X