பொண்ணுங்களுக்கு வந்தா ரத்தம்.. பசங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா.. ஜானி டெப்புக்கு என்னாச்சு?

லாஸ் ஏஞ்சல்ஸ்: பைரேட்ஸ் ஆஃபி தி கரீபியன் படத்தின் நாயகன் ஜானி டெப்புக்கு நீதி வேண்டும் என #JusticeForJohnnyDepp ஹாஷ்டேக்கை உருவாக்கி அவரது ரசிகர்கள் உலகளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

பிரபல ஹாலிவுட் ஹீரோ ஜானி டெப் மற்றும் அவரது இரண்டாவது மனைவி மற்றும் ஹாலிவுட் நடிகையான அம்பெர் ஹெர்ட் இருவருக்கும் இடையே நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு வழக்கு நடைபெற்று வருகிறது.

தனது மனைவி அம்பர் ஹெர்ட் தன்னை தாக்கியதாகவும், தனது விரல்களை துண்டித்ததாகவும், போட்டோ ஆதாரங்களை வெளியிட்டு தனது பக்கத்தை வலிமை படுத்தி வந்தார் ஜானி டெப்.

என்ன பிரச்சனை

என்ன பிரச்சனை

பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தில் கேப்டன் ஜாக்ஸ் பேரோவாக நடித்து உலகளவில் ஃபேமஸான ஜானி டெப், 1983ம் ஆண்டு லோரி அன்னி அல்லிசன் என்பவரை மணந்து 2 வருடத்தில் விவாகரத்து செய்தார். அதன்பிறகு ஹாலிவுட் நடிகை அம்பெர் ஹெர்டை 2015ம் ஆண்டு மணந்து 2017ம் ஆண்டு விவாகரத்து செய்தார். மேலும், அம்பர் ஹெர்ட் தன்னை தாக்கியதாகவும் அவரால் தனது புகழுக்கு பங்கம் விளைந்துள்ளதாகவும் மான நஷ்ட வழக்கு போட்டுள்ளார்.

ஆடியோ ஆதாரம்

இந்நிலையில், ஜானி டெப்பை தான் தாக்கியது உண்மை தான் என அம்பர் ஹெர்ட் பேசியுள்ள ஆடியோ ஆதாரம் வெளியாகி உள்ள நிலையில், ஜானி டெப்புக்கு நீதி கிடைக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் #JusticeForJohnnyDepp ஹாஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

கண்ணைக் கட்டிக் கொள்ளும்

பாலியல் தொல்லை மற்றும் பெண்களை தாக்கினால் மீடியாக்கள் ஒன்றுக் கூடி வரும் என்றும், அதுவே ஆண்கள் பாதிக்கப்பட்டால் மீடியாக்கள் மற்றும் சமூகம் கண்ணை மூடிக் கொண்டு வேடிக்கை பார்க்கும் என்றும் ஜானி டெப் ரசிகர்கள் மீம்களை போட்டு அந்த ஹாஷ்டேக்கில் சரமாரியாக விளாசி வருகின்றனர்.

விரல் துண்டிப்பு

அம்பெர் ஹெர்ட் தன்னை தாக்கியதாகவும், தனது விரல்களை துண்டித்ததாகவும், மேலும், தன் மீது அவதூறுகளை பரப்பியதாகவும் வழக்கு தொடர்ந்து ஜானி டெப், நஷ்ட ஈடாக ரூ.355 கோடி தரவேண்டும் என்றும் கோர்ட்டில் கோரிக்கை வைத்துள்ளார். ஜானி டெப் தான் தன்னை தாக்கியதாக அம்பர் ஹெர்டும் வாதங்களை அடுக்கி வருகிறார்.

கைது செய்யப்படுவாரா?

ஜானி டெப் மீது அம்பர் ஹெர்ட் கொடுத்த புகாரை அடுத்து பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தில் இருந்து ஜானி டெப் நீக்கப்பட்டார். ஆனால், தற்போது வலுவான ஆடியோ ஆதாரம் வரை கிடைத்துள்ள நிலையில், ஆக்வாமேன் இரண்டாம் பாகத்தில் இருந்து அம்பர் நீக்கப்படுவாரா என்றும், அவர் கைது செய்யப்படுவாரா? என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

பெண்களுக்கு வந்தா ரத்தம்

பெண்களுக்கு வந்தா ரத்தம், ஆண்களுக்கு வந்தா தக்காளி சட்னியா என்ற ரீதியில் ஜானி டெப்புக்கு ஆதரவாக யாரும் குரல் கொடுக்கவில்லை என்றும், ரசிகர்களே அவருக்கான நீதியை வாங்கித் தருவோம். ஹாலிவுட் நடிகை அம்பர் ஹெர்டை கைது செய்யும் வரை ஓயமாட்டோம் என ஜானி டெப் ரசிகர்கள் தொடர்ந்து ட்வீட்களை போட்டு தெறிக்கவிட்டு வருகின்றனர்.

ஆக்வாமேன் 2

நெவர் பிரேக் டவுன், தி ரம் டைரி, ஆக்வாமேன் உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்துள்ள அம்பர் ஹெர்ட், ஆக்வாமேன் 2ம் பாகத்திலும் நாயகியாக நடித்து வருகிறார். ஜானி டெப்பை தாக்கிய விவகாரத்தால், ஆம்பர் ஹெர்டை ஆக்வாமேன் 2 படத்தில் இருந்து நீக்க ஜானி டெப் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

பறக்கும் ட்ரோல்கள்

ஜானி டெப் மற்றும் அம்பர் ஹெர்ட் விவகாரம் உலகளவில் டிரெண்டாகி வரும் நிலையில், கேப்டன் ஜாக்ஸ்பேரோ நடிகரை அவரது முன்னாள் மனைவி தாக்கினார் என்ற செய்தியை அறிந்த ரசிகர்கள், ஜானி டெப்பையும் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X