சூப்பர்ஸ்டாரின் தலைவர் 168ல் சிவகார்த்திகேயனா? புதிய ஹாஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் செய்யும் ரசிகர்கள்
சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் தலைவர் 168 படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் #WeWantSKForThalaivar168 என்ற ஹாஷ்டேக் உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சித்தார்த், தலைவர் 168 படத்திலும் நடிக்க உள்ளார் என்ற தகவல் சமீபத்தில் பரவியது.
டிரெண்டிங்
இந்நிலையில், சிவகார்த்திகேயன் அந்த ரோலில் நடித்தால் சூப்பராக இருக்கும் என சிவகார்த்திகேயன் ரசிகர்களும், தல அஜித் ரசிகர்களும் #WeWantSKForThalaivar168 ஹாஷ்டேக்கை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள நிலையில், இந்த படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ரஜினி ஃபேன்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை ஹீரோவாக உருவாகியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன் தீவிர ரஜினி ரசிகர் என்பது ஊருக்கே தெரியும். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் ஓரத்தில் நிற்கும் வாய்ப்பு கிடைத்தாலும், உடனடியாக ஓகே சொல்லி நடிப்பேன் என பல மேடைகளில் சிவகார்த்திகேயன் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி சுரேஷ் ஜோடி
ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி சுரேஷ். தொடர்ந்து, ரெமோ, சீமராஜா படங்களிலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்துள்ளார். சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் தலைவர் 168 படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக சிவகார்த்திகேயன் கச்சிதமாக இருப்பார் என ரசிகர்கள் கருதுகின்றனர்.
ஃபேக் ஐடி
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் தலைவர் 168 படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார் என்ற அறிவிப்பு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், அது ஃபேக் ஐடி அறிவிப்பு என்பது சிவகார்த்திகேயன் ரசிகர்களை அப்செட் செய்தாலும், விரைவில் இது நிஜமாகும் என ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

சித்தார்த்தா? சிவகார்த்திகேயனா?
கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் சித்தார்த், சிவா இயக்கத்தில் உருவாகி வரும் தலைவர் 168 படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்ற தகவல் அண்மையில் வைரலானது. ஆனால், தற்போது அந்த கதாபாத்திரத்திற்கு சித்தார்த்தை விட சிவகார்த்திகேயன் பொருத்தமாக இருப்பார் என எஸ்.கே ரசிகர்கள் ட்வீட் போட்டு வருகின்றனர்.
விஜய்சேதுபதி நடிச்சிட்டாரு
கார்த்திக் சுப்புராஜின் பேட்ட படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி கூட விஜய்சேதுபதி வில்லனா நடிச்சிட்டாரு.. விஜய்சேதுபதிக்கு அப்புறம் ரஜினிகாந்த் கூட சிவகார்த்திகேயன் நடிச்சா நல்லா இருக்கும். சன் பிக்சர்ஸ் பார்த்து பண்ணுங்க இந்த காம்போ 2020ம் ஆண்டு வேற லெவலில் இருக்கும் என சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தொடர்ந்து ட்விட்டரை தெறிக்க விட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











