Just In
- 9 min ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 40 min ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
- 2 hrs ago
விஜய்யைத் தொடர்ந்து பூனையுடன் போஸ் கொடுக்கும் மோகன்லால்... வைரலாகும் பிக்ஸ்!
- 2 hrs ago
சிலம்பாட்டத்தில் இத்தனை வகைகளா.. பிரமிக்க வைத்த பெண்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
Don't Miss!
- Automobiles
2021ம் ஆண்டின் மலிவு விலை பைக்குகள் இவைதான்! குடியரசு நாளில் பைக் வாங்கும் பிளான் இருந்த இதை கொஞ்சம் பாருங்க!
- Lifestyle
மைதா போண்டா
- News
உமாசங்கர் மரணத்தில் உள்ள மர்மம் என்ன...சிபிசிஐடி விசாரணை வேணும்...ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை
- Sports
பெரிய அளவில் கவனம் செலுத்துவதில்லை.. பயிற்சி இல்லை.. தல மீது கோபத்தில் இருக்கும் சீனியர் தலைகள்!
- Finance
பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து-ஐ விட இந்தியாவில் அதிக வருமான வரி..!
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அடுத்த படம் புதுப்பேட்டை 2 தான்.. செல்வராகவன் அறிவிப்பு.. இவரு வில்லனா வந்தா எப்படி இருக்கும்?
சென்னை: என்.ஜி.கே படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் அடுத்ததாக புதுப்பேட்டை 2 படம் உருவாகும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கடந்த 2006ம் ஆண்டு வெளியான புதுப்பேட்டை படத்திற்கு இன்னமும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது.
அதன் இரண்டாம் பாகத்தை செல்வராகவன் இயக்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவு விரைவில் நினைவாக போகிறது.
— Nandhan Baskaran (@Nandhan_Blunk) March 7, 2020 |
செல்வராகவன் அறிவிப்பு
கடந்த மார்ச் 5ம் தேதி இயக்குநர் செல்வராகவனின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. புதுப்பேட்டை 2 அல்லது ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தை செல்வராகவன் அடுத்ததாக இயக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட இயக்குநர் செல்வராகவன், அடுத்ததாக புதுப்பேட்டை 2வை இயக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
|
டிரெண்டிங்
கடைசியாக செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவின் என்.ஜி.கே வெளியானது. என்.ஜி.கே படத்தைத் தொடர்ந்து ஜீனியஸ் செல்வராகவன் அடுத்து எந்த படத்தை இயக்குவார் என்ற எதிர்பார்ப்பு, அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில், மீண்டும் தனது தம்பி தனுஷுடன் இணைந்து புதுப்பேட்டை 2 பண்ணப் போறேன் என செல்வராகவன் கூறியது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.
|
சொதப்பிடக் கூடாது
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால், சினேகா நடிப்பில் வெளியான புதுப்பேட்டை திரைப்படம், ரசிகர்களின் ஃபேவரைட் படமாக இருக்கிறது. அந்த படத்தின் இசை, நடிப்பு, வசனம் மற்றும் கிளைமேக்ஸ் என அனைத்துமே கச்சிதம். பார்ட் 2 எடுக்கிறேன் என்ற பேர்வழியில், புதுப்பேட்டை படத்தின் பெயரை கெடுத்து விடாமல் இருந்தாலே போதும் என இந்த ரசிகர் தனது கருத்தை முன் வைத்துள்ளார்.
|
கொக்கி குமார் ரிட்டர்ன்ஸ்
புதுப்பேட்டை படத்தில் கொக்கி குமார் கதாபாத்திரத்தில், நடிகர் தனுஷ், அப்பவே தனது நடிப்பு அசுரனை முழுசா இறக்கியிருப்பார். புதுப்பேட்டை 2 படம் உருவானால், அதில் ஒரே ஒரு எதிர்பார்ப்பு, கொக்கி குமார் ரிட்டர்ன்ஸ் மற்றும் அவர் செய்யும் ரவுடி அரசியல் தான் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
|
ரசிகர்கள் வருத்தம்
தனுஷின் வெற்றி படங்கள் பார்ட் 2வாக எடுக்கும் போது தோல்வியை தழுவி வருவதால், புதுப்பேட்டை 2 எப்படி வரும் என்ற அச்சமும் ரசிகர்கள் மத்தியில் இப்போதே எழுந்துள்ளது. விஐபி 2, மாரி 2 இதை நினைச்சு வருத்தப் படுறதா.. இல்லை புதுப்பேட்டை 2வை நினைச்சு சந்தோஷப்படுறதான்னு இந்த ரசிகர் தனது சந்தேகத்தை முன் வைத்துள்ளார்.

இவரு வில்லனா நடிச்சா?
புதுப்பேட்டை படத்தில், சைடு ரோலில் நடித்த சேது, இப்போ மக்கள் செல்வன் விஜய்சேதுபதியா மாறி இருக்கிறார். புதுப்பேட்டை 2 படம் கன்ஃபார்ம் ஆகி உள்ள நிலையில், விக்ரம் வேதா, பேட்ட, மாஸ்டர் படங்களை தொடர்ந்து, புதுப்பேட்டை 2 படத்தில் விஜய்சேதுபதி வில்லனா நடிச்சா எப்படி மாஸா இருக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

எப்போ உருவாகும்
தனுஷுடன் புதுப்பேட்டை 2 படத்தை பண்ண போறேன்னு அண்ணன் செல்வராகவன் அறிவித்துள்ளார். ஆனால், கர்ணன், அட்ரங்கி ரே, ராம் குமார் படம் என கைவசம் பல படங்களை வைத்துள்ள நடிகர் தனுஷ், செல்வராகவன் புதுப்பேட்டை 2வுக்கு எப்போது கால்ஷீட் கொடுப்பார். படம் எப்போது உருவாகும் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.