Jana Nayagan X Parasakthi: பராசக்தி ஆடியோ லாஞ்சில் ஜன நாயகன் டிரைலர்.. கொல மாஸ் வீடியோவா இருக்கே
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள பராசக்தி படமும் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ஜன நாயகன் படமும் பொங்கலுக்கு மோதுகிறது. கடந்த வாரத்தில் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா நடந்தது, இந்த வாரத்தில் பராசக்தி இசை வெளியீட்டு விழா நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்நிலையில் அங்கு கூடியுள்ள ரசிகர்கள் அங்கு அமர்ந்து கொண்டு இன்று சில மணி நேரங்களுக்கு முன்னர் வெளியான ஜன நாயகன் படத்தின் டிரைலரைப் பார்த்துக் கொண்டு உள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ஜன நாயகன் படத்தை ஹெச். வினோத் இயக்கி உள்ளார். படத்தை கே. வி. என் நிறுவனம் பெரும் பொருட் செலவில் தயாரித்துள்ளது. படத்தில் நடிகைகள் பூஜா ஹெக்டே, பிரியா மணி, மமிதா பைஜு என பலரும் நடித்துள்ளார்கள். படத்தின் டிரைலரைப் பார்த்ததும் ரசிகர்கள் இது பகவந்த் கேசரி படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் என்பதை உறுதி செய்து விட்டார்கள். படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இது நடிகர் விஜய்யின் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

பராசக்தி: அதேபோல் சுதா கொங்கரா இயக்கத்தில், டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள பராசக்தி படம் சிவகார்த்தியேகனின் 25வது படம். படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திற்கு ஜி.விஒ. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இது இவரது இசையில் உருவாகும் 100வது படம். இப்படி இருக்கையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை புறநகரில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு கூடியுள்ள ரசிகர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் படக்குழுவினரை ஆரவாரம் செய்து வரவேற்றுக் கொண்டு உள்ளார்கள்.
ஜன நாயகன் டிரைலர்: இந்நிலையில் பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வந்த வளாகத்தில் இருந்த ரசிகர் ஒருவர் அங்கு, அமர்ந்து கொண்டு ஜன நாயகன் படத்தின் டிரைலரைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார். இத்தனைக்கும் சிவகார்த்திகேயன் இசை வெளியீட்டு விழாவுக்கு வரும் போது ஜன நாயகன் டிரைலரைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார். இது தொடர்பான வீடியோவை பார்த்த இணையவாசிகள் பலரும், எங்கு இருந்தாலும், எதற்கு முக்கியத்தும் கொடுக்கிறோம் என்பதுதான் விஷயமே என்று கமெண்ட் போட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











