Trance of Kuberaa: தனுஷின் சிவ தாண்டவமா குபேரா? டீசரில் இப்படி மிரட்டி விட்டாரே? கதை அது தான் போலயே?
சென்னை: தனுஷ் நடிப்பில் ரிலீஸ் ஆக தயாராக உள்ள படங்கள் என்றால் அது குபேரா மற்றும் இட்லி கடை. இதில் குபேரா நேரடி தெலுங்கு படம் இது மட்டும் இல்லாமல் இந்த படத்தை தமிழிலும் படக்குழு உருவாக்கியுள்ளது. ரிலீஸ்க்கு ரெடியாக உள்ள படங்களில் முதலில் ரிலீஸ் ஆக உள்ள படம் குபேரா. இந்த படம் வரும் ஜூன் மாதம் 20ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் படக்குழு தரப்பில் இருந்து படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்கள். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
குபேரா படத்தை இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியுள்ளார். படத்தில் நாகர்ஜுனா, தனுஷ், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். ஏற்கனவே படக்குழு சார்பில் கிளிம்ஸ் வீடியோ, ஒரு பாடல் ஆகியவை வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக படக்குழு வெளியிட்ட பாடலான, 'போய் வா நண்பா' பாடல் ரசிகர்களை ஆட்டம் போட வைத்தது. பாடலை தமிழ் மற்றும் தெலுங்கில் தனுஷ்ஷே படியிருந்தார்.

குபேரா - தக் லைஃப்: படம் வெளியாக இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில் படக்குழு சார்பில் படத்தின் புரோமோசன் வேலைகளைத் தொடங்கி விட்டனர். படம் தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்திய சினிமாவில் இந்த படத்தின் மீது தனி கவனம் உள்ளது. இது மட்டும் இல்லாமல், ஜூன் 5ஆம் தேதி உலக நாயகன் கமல்ஹாசனின் தக் லைஃப் படம் வெளியாகவுள்ளதால், தக் லைஃப் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பு, குபேரா படத்தின் வெளியீட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
அட்டகாசமான டீசர்: இந்நிலையில் குபேரா படத்தின் படக்குழு சார்பில் இருந்து இன்று, அதாவது மே 25ஆம் தேதி படத்தின் டீசரை வெளியிட்டுள்ளார்கள். படக்குழு வெளியிட்டுள்ள டீசர் மொத்தம் 2 நிமிடத்திற்கு உள்ளது. மேலும் இந்த டீசரில் ஒரு டயலாக் கூட இல்லை. இது மட்டும் இல்லாமல் இந்த இரண்டு நிமிட வீடியோவானது, கிட்டத்தட்ட படத்தின் இரண்டாவது பாடல் போலவும் பின்னணியில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குபேரா படத்தின் இந்த டீசர் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியிடப்பட்டுள்ளது.

இசை வெளியீட்டு விழா: மேலும் டீசரைப் பார்த்த ரசிகர்கள் இந்த படத்தின் கதை கிட்டத்தட்ட விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படத்தின் கதையைப் போல இருக்குமோ என்ற கேள்வியை முன் வைத்து வருகிறார்கள். மேலும், கிளிம்ஸ் வீடியோவில் ராஷ்மிகா மந்தனாவுக்காகவே உருவாக்கப்பட்டது போல இருந்தது. போய் வா நண்பா பாடல் தனுஷ்க்காக வெளியானது. இப்படி இருக்கும்போது, டீசரின் ஒரு பாதி நாகர்ஜுனாவுக்காகவும் ஒரு பாதி தனுஷ்ஷை மையப்படுத்தியும் உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் படக்குழு தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. ரசிகர்கள் அந்த தேதிக்காக ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications