Jailer - ஜெயிலர்.. படம் பார்க்கப்போகும் ரசிகர்களே தமன்னா தரிசனம் எப்போ வருது தெரியுமா?
சென்னை: Jailer (ஜெயிலர்) ஜெயிலர் படத்தில் ரசிகர்கள் ரொம்பவும் எதிர்பார்த்த காவாலா பாடல் திரையரங்குகளில் வந்தவுடன் ரசிகர்கள் உச்சக்கட்ட செலிபிரேஷன் மோடுக்கு சென்றுவிட்டனர்
ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படமானது இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. மலையாளத்திலிருந்து மோகன் லால், தெலுங்கிலிருந்து சுனில், கன்னடத்திலிருந்து சிவராஜ் குமார், ஹிந்தியிலிருந்து ஜாக்கி ஷெராஃப் என பான் இந்தியா ஸ்டார்கள் இதில் களமிறங்கியிருக்கின்றனர். இவர்கள் தவிர வசந்த் ரவி, யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் தமன்னா, விநாயகன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்

படத்துக்கு ரெஸ்பான்ஸ்: படத்துக்கு மிகச்சிறந்த ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. பீஸ்ட்டில் விட்டதை இதில் நெல்சன் திலீப்குமார் பிடித்துவிட்டார் என்றும்; பல வருடங்களுக்கு பிறகு தலைவர் ரஜினிக்கு தரமான கம்பேக்காக அமைந்திருக்கிறது. நெல்சன் திலீப்குமார் ரஜினிகாந்த்தை அவ்வளவு அழகாக, மாஸாக காட்சிப்படுத்தியிருக்கிறார் என்றும்; இடைவேளை காட்சியில் எல்லாம் திரையரங்கில் தீ பிடிக்கும் அளவு ஃபயராக இருக்கிறது என்றும் ட்விட்டரில் தெரிவித்துவருகின்றனர்.
இரண்டாம் பாதி: முதல் பாதி கொஞ்ச நேரம் ஸ்லோவாக போனாலும் சிறிது நேரத்திலேயே பிக்கப் ஆகிவிடுகிறது. அந்த மொமண்ட்டத்தை இரண்டாம் பாதியிலும் நெல்சன் தொடர செய்திருப்பது பார்ப்பதற்கே அருமையாக இருக்கிறது. அதிலும் ரஜினிகான ப்ளாஷ்பேக் காட்சியில் அவரை பார்க்கும்போது மூன்றுமுகம் ரஜினிகாந்த் நியாபகம் வருகிறார் என சிலாகிக்கின்றனர்.
படம் மெகா ஹிட்: சில இடங்களில் நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தாலும் முதல் காட்சி முடிவில் அதிக அளவு பாஸிட்டி விமர்சனங்களே வந்திருப்பதால் படம் மெகா ஹிட் என்றும்; பல படங்களின் வசூல் சாதனையை முறியடிக்கும் என்றும் கூறுகின்றனர் ரஜினி ரசிகர்கள். அதுமட்டுமின்றி இந்தப் படத்தின் மூலம் சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்துக்கு ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் எனவும் கமெண்ட்ஸ்களை காண முடிகிறது.

காவாலா பாடல்: ஜெயிலர் படத்தில் ரஜினியை பார்ப்பதற்கு ரசிகர்கள் எவ்வளவுக்கு ஆர்வமாக இருந்தார்களோ அதே அளவு ஆர்வம் தமன்னாவை பார்ப்பதிலும் இருந்தது. ஏனெனில் காவாலா பாடலில் அவர் போட்டிருக்கும் நடனம் அப்படி.இதன் காரணமாக படத்தின் முதல் பாதி ஓடிக்கொண்டிருக்கும்போதே என்ன இன்னமும் தமன்னாவை காணவில்லை என்ற குரல்கள் கேட்க ஆரம்பித்தன.
காவாலா பாடல் எப்போது வருகிறது என்றால் ரஜினிகாந்த் வில்லனின் பேச்சை கேட்டு ஒரு விஷயத்துகாக இரண்டாம் பாதியில் ஆந்திராவுக்கு செல்வார். அப்போதுதான் தமன்னா ஆடியிருக்கும் காவாலா பாடல் வரும். எனவே படம் பார்க்கப்போகும் ரசிகர்களே தமன்னா தரிசனத்திற்கு நீங்கள் இரண்டாம் பாதிவரை காத்திருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











