IPL Opening Ceremony: எல்லாமே இந்தி பாட்டு.. ரசிகர்களை ஏமாற்றிய ஏ.ஆர்.ரஹ்மான்!

சென்னை: ஐ.பி.எல் 17 ஆவது சீசன் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராஃப் ஆட்டம் ஆடினர். அப்போது, ஏ ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியில் பாட்டுப்பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஆனால், இவர் பெரும்பாலும் இந்திப்பாட்டு பாடியதால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர்.

2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நேற்று பிரம்மாண்டமாக தொடங்கியுள்ளது. நேற்று நடைபெற்ற தொடக்கவிழாவில், அக்‌ஷய் குமார் தேசிய கொடியுடன் அந்தரத்தில் பறந்து வந்து நடனம் ஆடினார். அப்போது, பாலிவுட் பாடகர் சோனு நிகாம் வந்தே மாதரம் பாடலை பாட, இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் மேடையில் என்ட்ரி கொடுத்தார். இதைத் தொடர்ந்து, மகேந்திர சிங் தோனிக்காக சிம்பு நடித்த பத்து தல படத்தில் பத்து தல பாடலை ரஹ்மான் பாட சேப்பாக்கம் மைதானமே வைப்பானது.

Fans were disappointed as AR Rahman sang a Hindi song at the IPL opening ceremony

ரசிகர்கள் ஏமாற்றம்: இந்த நிகழ்ச்சியில் ரஹ்மான் ஆறு இந்தி பாடலையும் மூன்றே மூன்று தமிழ் பாடலை பாட்டுமே பாடியதால் ரசிகர்கள் இதிருப்தி அடைந்தனர். இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள ரசிகர்கள். அவரின் தமிழ் பாடலை கேட்க ஆர்வமாக இருந்தோம். ஆனால், அது நடக்காதது ஏமாற்றமாக உள்ளது என்றும், சென்னை மற்றும் பெங்களூரு அணிக்கு இடையில் நடக்கும் போட்டியில் தமிழ், கன்னடம் ஆகிய இரு மொழிப் பாடல்கள் இல்லாமல் இந்திப் பாடல்களை பாட என்ன காரணம் என்று கேட்டு வருகின்றனர்.

வெற்றி: இதையடுத்து நடைபெற்ற நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. கடந்த ஆண்டு சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றதன் அடிப்படையில் முதல் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டூப்ளசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதில், 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று சவாலான இலக்கை நோக்கி சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். இதையடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X