மக்களின் பேராதரவை பெற்ற "கன்னிமாடம்".. பாராட்டு மழையில் நனையும் போஸ் வெங்கட்!
சென்னை: கன்னி மாடம் படம் வெற்றி பெற்றதை அடுத்து பொதுமக்கள் மற்றும் திரை உலக பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இயக்குனர் போஸ் வெங்கட்டிற்கு இது முதல் திரைப்படம். அதில் தனது உழைப்பை முழுமையாக வெளிபடுத்தி மக்களிடையே தனி முத்திரை பத்தித்துள்ளார்.
சின்னத்திரை சீரியல்களில் இவரை வரவேற்ற தமிழ் ரசிகர்கள், வெள்ளித்திரையிலும் இவரை கொண்டாடுவார்களா என்று பலரும் எண்ணி இருப்பார்கள். அந்த எண்ணம் பழித்துள்ளது தற்போது தமிழ் திரை ரசிகர்களால் இவரது படம் கொண்டாடப்பட்டு வருகிறது.

ரசிகர்களை கவர்ந்தது
தமிழ் திரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது இந்த படத்தின் கதை மற்றும் திரைக்கதை தான். அந்த அளவிற்கு பலரிடம் இந்த திரைப்படம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வசனங்கள் தான் படத்திற்கு ப்ளஸ் பாயிண்ட் என்று கூறும் அளவிற்கு இருந்தது. இது போன்ற ஒரு கதை ஒரு புதிய முயற்சி தான் இப்படத்தின் வெற்றிக்கு ஒரு காரணம் என்று ரசிகர்களால் சொல்லப்படுகிறது.

இசை கூடுதல் பலம்
படத்தில் மற்றுமொரு கூடுதல் பங்கு, பலம் இசைக்கு உண்டு. சீன்களில் ஒலிக்கும் பின்னணி இசை பெரிதும் பேசப்படுகிறது. இப்படத்தில் ஆட்டோக்கு என்று ஒரு தனி பாடல் (அந்தெம்) தற்போது வரை டிரெண்டிங்கில் உள்ளது. பாட்ஷா படத்திற்கு பிறகு இது போன்ற ஒரு பாடல் இதில் அமைந்துள்ளது. ரஜினிக்கு பிறகு போஸ் வெங்கட் தான். இது போன்ற பாடலை கொடுத்து பெருமைப்படுத்தியதற்கு ஆட்டோ ஒட்டுனர்கள் பலரும் நன்றி தெரிவித்து வருகின்றனர். இப்படத்திற்கு ஹரி சாய் இசை அமைத்துள்ளார்.

திரைபிரபலங்கள் பாராட்டு
ஒத்த செருப்பு என்று ஒரு படத்தை இயக்கி தமிழ் சினிமாவை உலகதரத்திற்கு கொண்டு சேர்த்த ராதாகிருஷ்ணன் பார்த்திபன் கன்னி மாடம் படத்தை பார்த்து பாராட்டியுள்ளார். மற்றும் குக்கூ, ஜோக்கர் என்று தனது வித்தியாசமான படங்களால் தமிழ் ரசிகர்களை கவர்ந்த ராஜு முருகனும் இப்படத்தை பார்த்து அவரும் பாராட்டியுள்ளார்.

கேக் வெட்டி கொண்டாட்டம்
படம் வெளியானதிலிருந்து சென்னை, மதுரை, சேலம், கோவை என்று எல்லா இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இது போன்ற வெற்றியை சிறிய பட்ஜெட் படங்களுக்கு கொடுத்த தமிழ் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து கன்னி மாடம் திரைப்படம் படக்குழு வெற்றியை கேக் வெட்டி கொண்டாடியது. மற்றும் இது போன்ற பல படங்களை தயாரிக்கும் மாறு தயாரிப்பாளர் ஹஷீர்க்கு ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











