Leo - ரிசல்ட் முன்னரே தெரிஞ்சிடுச்சோ.. அதான் 4 மணி ஷோவுக்கு அனத்துனீங்களா?.. லியோவை விளாசும் ரசிகர்கள்
சென்னை: Leo Review (லியோ விமர்சனம்) லியோ படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்துவரும் ரசிகர்களில் ஒருதரப்பினர் படக்குழுவை கடுமையாக விளாசிவருகின்றனர்.
விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கம் என்பதாலும் இருவரும் சேர்ந்து ஏற்கனவே மாஸ்டர் எனும் வெற்றிப்படத்தை கொடுத்திருப்பதாலும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்காக இருந்தது. அதனால் ரசிகர்கள் இன்றை தினத்துக்காக காத்துக்கொண்டிருந்தனர்.

திருவிழா: இன்றைய நாளை அவர்கள் திருவிழா போல் கொண்டாடினார்கள்.முதல் நாள் முதல் காட்சிக்கு அலப்பறையை போட்டு தியேட்டருக்குள் சென்ற ரசிகர்கள் லியோ படத்தை காட்சிக்கு காட்சி ரசித்தனர். விஜய் இண்ட்ரோ காட்சி, ஹைனா சண்டை காட்சி என பல கூஸ்பம்ப்ஸ் மொமண்ட்டுகள் படத்தில் இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
சூப்பர்: படத்தை பார்த்து தியேட்டரைவிட்டு வந்த ரசிகரக்ள் கண்டிப்பாக இந்தப் படம் இண்டஸ்ட்ரி ஹிட்டடிக்கும் என ஆணித்தரமாக கூறி செல்கின்றனர். மேலும் எங்கள் தளபதி இரண்டு கெட்டப்புகளிலும் அட்டகாசமாக இருக்கிறார். நடிப்பிலும், சண்டைக்காட்சியிலும் பின்னி பெடலெடுத்திருக்கிறார் என்று பூரிப்புடன் சொல்லி செல்கின்றனர்.
படத்தில் ஒன்னுமே இல்லை: அதேசமயம் படத்தை பார்த்த ரசிகர்களில் இன்னொரு தரப்பினர் இந்தப் படத்தைத்தான் லோகேஷ் இவ்வளவு மாதங்களாக ஒட்டிக்கொண்டிருந்தாரா படத்தில் ஒன்றுமே இல்லை என்று ஓபனாகவே பேச ஆரம்பித்திருக்கின்றனர். படத்தின் முதல் காட்சி முடிந்திருக்கும் சூழலில் கலவையான விமர்சனங்கள் வர ஆரம்பித்திருக்கின்றன.

இதுக்காகத்தான் அதெல்லாமா?: படம் பிடிக்காத ரசிகர்கள் சமூக வலைதளங்களில் படக்குழுவை விளாசி பதிவுகளையும் போட ஆரம்பித்திருக்கின்றனர். அதாவது, லியோ படத்தின் ரிசல்ட் முன்னரே தெரிந்துவிட்டதுபோல. இந்தப் படம் கண்டிப்பாக ஒரு வாரம் எல்லாம் தாக்கு பிடிக்காது என்பதை அறிந்துதான் முதல் நாளிலேயே வசூலை அள்ள வேண்டும் என அதிகாலை 4 மணி அல்லது 7 மணி ஷோவை போட்டு வசூலை அள்ளலாம் என ப்ளான் போட்டிருக்கிறார்கள்.
அதுமட்டுமின்றி இதன் காரணமாகத்தான் தியேட்டர்களிடம் முதல் வாரம் டிக்கெட் விற்கும் பணத்தில் 80 சதவீதம் பங்குத்தொகை கேட்டிருக்கிறார்கள் போல என கூறும் ரசிகர்கள்; இந்தப் படம் தேறாது என்பதால்தான் ப்ரோமோஷனும் ஒழுங்காக செய்யவில்லைபோல என சகட்டுமேனிக்கு பதிவிட்டுவருகின்றனர். அவர்களுக்கு விஜய் ரசிகர்களும் தக்க பதிலடி கொடுத்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











