நயன்தாரா ஆவணப்படம்.. ச்ச இப்படி ஆகிப்போச்சே.. ஜெயம் ரவி - ஆர்த்தியை நினைத்து ஃபீல் செய்யும் ஃபேன்ஸ்
சென்னை: ஆர்த்தியை பிரிவதாக அறிவித்து விவாகரத்துக்கு மனுத்தாக்கல் செய்திருக்கிறார் ஜெயம் ரவி. முதலில் இந்த விவாகரத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்கிற தொனியில் விளக்கம் அளித்திருந்தார் ஆர்த்தி. அதற்கு பிறகு அவரும் அமைதியாகிவிட்டார். இருவரது விவாகரத்து மனுவும் சமீபத்தில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது இருவரும் ஆஜராகினர். சூழல் இப்படி இருக்க அவர்கள் இரண்டு பேரையும் நினைத்து ரசிகர்கள் ஃபீல் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் எந்த கிசுகிசு, சர்ச்சையிலும் சிக்காத வெகு சில நடிகர்களில் ஒருவராக இருந்தவர் ஜெயம் ரவி. அவர் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அந்தத் தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். காதலோடும், அமைதியோடும் நகர்ந்துகொண்டிருந்த அவரது திருமண வாழ்க்கையில் கடந்த சில காலமாக புயல் வீச தொடங்கியதாக தொடர்ந்து தகவல்கள் பரவிவந்தன. ஆனால் ரவியோ, ஆர்த்தியோ அதுகுறித்து எதுவும் கருத்து தெரிவிக்காமல் இருந்தார்கள்.

ஜெயம் ரவியின் முடிவு: சூழல் இப்படி இருக்க சில மாதங்களுக்கு முன்பு ரவி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், ஆர்த்தியை தான் பிரிவதாக அறிவித்தார். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் பிரிவுக்கு காரணம் ஆர்த்திதான் என்று பலரும் முதலில் பலமாகவே பேசினார்கள். ஆர்த்தி கொஞ்சம் அமைதியே காத்துவந்தார். ஒருகட்டத்தில் விளக்கமளித்த ஆர்த்தி, ரவியின் விவாகரத்து முடிவு தனக்கு தெரியாது என்றும்; அவரிடம் பேச பல முறை முயற்சி செய்தும் அது முடியவில்லை என்று கூறினார்.
கெனிஷாதான் காரணமா?: இது ஒருபக்கம் இருக்க பாடகி கெனிஷாதான் ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்துக்கு முக்கிய காரணம் என்றும்; கெனிஷாவும், ரவியும் தொடர்பில் இருக்கிறார்கள் என்றும் பேச்சு எழுந்தது. ஆனால் அதனை ரவி திட்டவட்டமாக மறுத்தார். மேலும் தான் முழுக்க முழுக்க ஆர்த்தி மற்றும் அவரது தாயால் கட்டுப்படுத்தப்பட்டேன் என்றும்; வீட்டு பணியாளுக்கு கிடைக்கும் மரியாதை கூட தனக்கு கிடைக்கவில்லை என்றும் புலம்பித் தள்ளினார் என்பது குறிப்பிடத்தக்கது.
விவாகரத்து மனு: இருந்தாலும் ஆர்த்தி மீது ஒருதரப்பினர் தொடர்ந்து குற்றச்சாட்டினை முன்வைத்தார்கள். இதனையடுத்து காண்டான ஆர்த்தி காட்டமான ஒரு அறிக்கையை வெளியிட்டார். சூழல் இப்படி இருக்க சட்டப்படி விவாகரத்து கோரி ஜெயம் ரவி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு விசாரணை சமீபத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயம் ரவி - ஆர்த்தி இரண்டு பேருமே ஆஜராகினர். இதன் காரணமாக மீண்டும் அவர்கள் சேர்வதற்கு வாய்ப்பே இல்லை என்பது உறுதியாகியிருக்கிறது.
ஃபீல் செய்யும் ரசிகர்கள்: இந்த விவகாரம் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிய சூழலில்; மீண்டும் அவர்களை நினைத்து ரசிகர்கள் ஃபீல் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். அதாவது Nayanthara Beyond The Fairy Tale என்ற ஆவணப்படம் இன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகியிருக்கிறது. அதில் நயனின் திருமண காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. அத்திருமணத்தில் ஜெயம் ரவியும், ஆர்த்தியும் ஒன்றாக கலந்துகொண்டிருக்கிறார்கள். இதனை கவனித்த ரசிகர்கள், எவ்வளவு சந்தோஷமாகவும், ஒற்றுமையாகவும் நயன் திருமணத்தில் இருவரும் கலந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்போது பிரிந்துவிட்டார்களே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











