சினிமாவுக்காக திருமணமே வேண்டாமென்று முடிவெடுத்த காமெடி நடிகர் சதீஷ்.. ஒய் திஸ் கொலைவெறி?

நடிகர் சதீஷுக்கு வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளனர் ரசிகர்கள்.

By Staff

Recommended Video

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சிம்பு | Cinema News | வீடியோ

சென்னை: காமெடி நடிகர் சதீஷ் பிறந்தநாளுக்கு ரசிகர் ஒருவர் வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழில் முன்னணி காமெடி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் சதீஷ். சிவகார்த்திக்கேயனுடன் இவர் நடித்த மிஸ்டர் லோக்கல் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. விரைவில் ஜீவாவுடன் இவர் நடித்த கொரில்லா ரிலீசாக இருக்கிறது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார் சதீஷ். அதற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் வித்தியாசமாக பிறந்தநாள் வாழ்த்தைத் தெரிவித்தனர்.

அடப்பாவி:

அதில் ஒரு ரசிகர், ‘சினிமாவிற்காக திருமணமே வேண்டாம் என வாழ்ந்து வரும் அண்ணண் சதீஷ் அவர்களுக்கு.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்' எனத் தெரிவித்திருந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சதீஷ், ஒய் திஸ் கொலைவெறி என்ற ரேஞ்சில் ‘அடப்பாவி' எனப் பதிலளித்துள்ளார்.

கீர்த்தி சுரேஷோட வாழ்க்கை?

சதீஷின் இந்தப் பிறந்தநாள் வாழ்த்தைப் பார்த்த நடிகை அம்மு, ‘இது உண்மையா சதீஷ். இது உண்மையென்றால் நிச்சயம் நீ பெரிய நடிகன் தான். என்ன உன் தியாகம்' எனப் பாராட்டியுள்ளார். 'அப்போ கீர்த்தி சுரேஷோட வாழ்க்கை' என ஒரு ரசிகர் கேள்வி எழுப்பியுள்ளார். பைரவா படத்தில் நடித்த போது, கீர்த்தி சுரேஷை சதீஷ் திருமணம் செய்து கொண்டதாக ஒரு புகைப்படம் வைரலானது குறிப்பிடத்தக்கது.

ஆர்யா வாழ்த்து:

இதே போல் ஆர்யா தனது வாழ்த்தில், ‘இந்தப் பிறந்தநாள் உறுதிமொழியாக இனி கேரவனில் அதிக நேரம் செலவழிப்பதில்லை என முடிவெடுத்துக் கொள் டார்லிங்' எனத் தெரிவித்துள்ளார்.

திருமணப் புகைப்படம்:

இன்னொரு ரசிகரோ, கடந்தாண்டு நடிகை ஒருவருக்கு சதீஷ் தாலி கட்டுவது போன்ற புகைப்படத்தை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்துக் கூறியுள்ளார். படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் அப்போது வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்தப் புகைப்படத்தைப் பார்த்து விட்டு, ‘வேறு போட்டோவே கிடைக்கவில்லையா?' என நொந்து போய் கேட்டுள்ளார் சதீஷ்.

இது ஓவர் ரசிகாஸ்:

இது ஓவர் ரசிகாஸ்:

இப்படியாக ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக தங்களது பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்துள்ளனர். சமூகவலைதளப் பக்கத்தில் அடிக்கடி கலகலப்பான பதிவுகளை வெளியிடுபவரான சதீஷை, பிறந்தநாளும் அதுவுமா இப்டியா கடுப்பேத்துவீங்க ரசிகாஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X