வயித்தில் நீ சுமந்த ஒண்ணு வைரமுத்து ஆயிருச்சு.. சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்!

சென்னை: கவிஞர் வைரமுத்துவின் பிறந்த நாளை முன்னிட்டு சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

கவிஞர் வைரமுத்து 1980 ஆம் ஆண்டு வெளியான நிழல்கள் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு பாடலாசிரியராக அறிமுகமானார்.

வைரமுத்து தனது 40 ஆண்டு சினிமா வாழ்க்கையில் 7500க்கும் மேற்பட்ட பாடல்களையும் கவிதை தொகுப்புகளையும் எழுதியுள்ளார். கவிஞர் வைரமுத்து இன்று தனது 66வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

வைரமும் முத்தும்..

வைரமும் முத்தும்..

இதனை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் வைரமுத்துவுக்கு சமூக வலைதளங்களில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில.. வைரமும் முத்தும்
பெயரில் மட்டும் இல்லை.. அவர் எழுத்திலும்.. என கவிஞர் வைரமுத்துவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார் இந்த ரசிகர்.

வைரமுத்து ஆயிருச்சு

வைரமுத்து ஆயிருச்சு

மற்றொரு ரசிகரான இவர், வைரமுத்து பிறப்பான்னு
வயித்தில் நீ சுமந்ததில்ல.. வயித்தில் நீ சுமந்த ஒண்ணு
வைரமுத்து ஆயிருச்சு!! வைரத்தை' தமிழுக்கு தந்த அன்னைக்கு நன்றி! இப்பொன்நாளுக்கு நன்றி!!!
# தமிழ் அரிமாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! என பதிவிட்டுள்ளார்.

மார்பில் ஊறும் உயிரே..

மார்பில் ஊறும் உயிரே..

வாழ்வு தொடங்கும் இடம் நீதானே! வானம் முடியுமிடம் நீதானே! காற்றைப் போல நீ வந்தாயே! சுவாசமாக நீ நின்றாயே! மார்பில் ஊறும் உயிரே! ஒரு தெய்வம் தந்த பூவே! என கன்னத்தில் முத்தமிட்டடாள் படத்தில் இடம் பெற்ற அவரது வரிகளை குறிப்பிட்டு வாழ்த்து கூறியிருக்கிறார் இந்த ரசிகர்.

இறைவனை வேண்டுகிறேன்

இறைவனை வேண்டுகிறேன்

இன்னும் பல காலம் வாழும், வாழ போகும்
உன் தமிழ் போலவே நீயும் பல்லாண்டு பல்லாண்டு வாழ
நீ நம்பாத, நான் நம்பும் இறைவனை வேண்டுகிறேன் கவிப்பேரரசு வைரமுத்து.. என அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறியிருக்கிறார் இந்த ரசிகர்.

காமம் வரை

காமம் வரை

கவிதை, காதல் தொடக்கம் காமம் வரை உன்னிடம் அறிந்தேன்.. இன்று அதேயளவு உன்னை காதலிக்காவிடினும் என் மனதில் ஏதோ ஒரு மூலையில் ஒரு நிரந்தர நாற்காலி போட்டு அமர்ந்திருக்கிறாய்
ஆனால் உன்னை முன்னரை போல் வியக்கவியலவில்லை
காரணம் அது அறியா பருவம் என பதிவிட்டுள்ளார் இந்த ரசிகர்.

வர்ணிக்கும் வரிகள்

வர்ணிக்கும் வரிகள்

காதல் இருக்கும் இடம் எல்லாம் கவிஞனாய் அங்கு இவர் இருக்கிறார்.. பிரம்மன் பெண்களை படைத்தான்... அவர்களை வர்ணிக்கும் வரிகளை மட்டும் இவரே படைத்தார்...இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவிஞர் வைரமுத்து.. என குறிப்பிட்டுள்ளார் இந்த ரசிகர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X